10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்கலாம் என்ற மருத்துவ படிப்பு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் ஆணையை நிறுத்திவைத்தது மருத்துவ ஆணையம். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பால் தேசிய மருத்துவ ஆணையம் முடிவு அடுத்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த இருந்த இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு 2025-26 கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து முடிவு வெளியிடப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து குறிப்பிட்டுள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை..
“தமிழ் நாட்டின் முதல்வர் #MKStalin அவர்களின் கடும் எதிர்ப்பிற்கு பணிந்து நிறைய மருத்துவக்கல்லூரிகள் இருக்கும் இடங்களில் மேற்கொண்டு புதிதாக கட்டக்கூடாது என்ற உத்திரவை திரும்பப்பெற்றது மருத்துவ ஆணையம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

