என்னால் கட்சிக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது. அவதூறுகள் வரைக்கூடாது என்றுதான் பொறுப்பில் இருந்து விலகினேன். கட்சியை இழிவுப்படுத்தக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
நான் விரும்பி இந்த அரசியலுக்கு வரவில்லை. கட்சிக் கேட்டுக்கொண்டதால்தான் வந்தேன் ” என்றிருக்கிறார்.
“வைகோவின் சேனாதிபதி நான்’ என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த துரை வைகோ, ”வைகோவுக்கு மல்லை சத்யா மட்டும் சேனாதிபதியில்லை. கட்சியில் இருக்கும் அத்தனை பேரும் தலைவருக்கு சேனாதிபதிகள்தான். இன்று சுமுக முடிவைக் கட்சியின் நிர்வாகக் குழுவே எடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.
