விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி ஆயிரம் கண் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அக்கட்சியின் தலைவர் கமல் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமை வழக்கறிஞர் M. பாஸ்கரன் துவக்கி வைத்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் T.செல்வாக்குமார் மற்றும் S.சரவணக்குமார் தலைமையிலும், மத்திய மாவட்ட பொறுப்பாளர் A.S.நாகராஜன் மற்றும் நகரசெயலாளர் ராஜாமணி முன்னிலையிலும் நடைபெற்றது.
உடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் அண்ணாதுரை மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




நீதி மையம் கட்சிக்கு தொண்டர்களே கிடையாது அப்படி இருக்கையில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள் என்கிற செய்தி பொய் செய்தி ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ரத்ததானம் என்கிறதும் பொய்யே ஒரு பய ரத்ததானம் செய்திருக்க மாட்டான்