Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காங்கிரஸ் வசமிருந்த 2 மாநிலங்களையும் மீட்டு கணிப்புகளை தவிடுபொடியாக்கிய பா.ஜ.,

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 3, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காங்கிரஸ் வசமிருந்த 2 மாநிலங்களையும் மீட்டு கணிப்புகளை தவிடுபொடியாக்கிய பா.ஜ.,
83
SHARES
134
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் 3ல் அமோக வெற்றி பெற்ற பாஜ., மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. மோடியே மீண்டும் பிரதமராவார் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஓட்டு எண்ணிக்கை

தேர்தல் நடந்த 4 மாநில ஓட்டுகள் இன்று (டிச.,3) எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், குழப்பத்தை ஏற்படுத்தின. ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் யார் ஆட்சி அமைப்பர் என்பதை, இந்த கருத்து கணிப்புகள் தெளிவாக சொல்லவில்லை.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி என அனைத்து கருத்து கணிப்புகளும் சொல்லின. அதன்படியே, இன்றைய தேர்தல் முடிவுகளிலும் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சியை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மூன்றில் அமோகம்

மற்ற மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரசும், ம.பி.,யில் பா.ஜ.,வும் ஆட்சியில் இருந்து வந்தன. கருத்து கணிப்புகளிலும் இந்த மூன்று மாநிலங்களில் இழுபறி நிலையே இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், இந்த மாநிலங்களில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

ம.பி.,யில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவைப்படும் நிலையில் 162 இடங்களுக்கு மேல் பாஜ கோலோச்சி நிற்கிறது. கடந்த தேர்தலில் 109 இடங்களிலேயே வென்றிருந்த பா.ஜ., இம்முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கிறது.

சத்தீஸ்கரில் கடந்த 2018 சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் வெறும் 15 தொகுதிகளில் வென்றிருந்த பா.ஜ., இப்போது 57 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. ஆளும் காங்கிரஸ் அங்கு 31 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் தனது ஆட்சி அதிகாரத்தை பா.ஜ.,விடம் இழப்பது உறுதியாகியுள்ளது.

ராஜஸ்தானை பொருத்தவரை அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என்றே பலரும் கருதினர். ஆனால், இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் நிலைமையே தலைகீழ் ஆனது. 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ., 109 இடங்களில் முன்னிலையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது. காங்கிரஸ் 74ல் மட்டுமே கால்பதித்துள்ளது.

பின்னடைவின் காரணம்

காங்கிரசின் பின்னடைவுக்கு ‛இண்டியா’ கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளை அரவணைத்து செல்லாததும் காரணமாக பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளை சேர்க்காமல் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு தனியாக களத்தில் குதித்த காங்கிரஸ், 3 மாநிலங்களிலும் வெற்றியை பா.ஜ.,விடம் பறிகொடுத்துள்ளது.

கருத்து கணிப்புகள் தவிடுபொடி

வந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள் எல்லாம் கருத்துகணிப்புகளை பொய்யாக்கி, 3 மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ‛மினி’ லோக்சபா தேர்தலாக பார்க்கப்பட்ட, இந்த தேர்தல் முடிவுகளில் பா.ஜ., வெற்றி முத்திரையை அழுத்தமாக பதிவு செய்துள்ளது. 2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வே வெற்றி பெற்று, மோடியே 3வது முறையாக பிரதமர் ஆகி ‛ஹாட்ரிக்’ அடிப்பார் என்பதும் ஏறக்குறைய உறுதியாக தெரிகிறது.

.

Previous Post

2 மனைவி, 9 குழந்தைகளுக்காக மோசடி செய்த சமூக வலைதள பிரபலம் கைது!

Next Post

மக்கள் நீதி மய்யம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்!!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மக்கள் நீதி மய்யம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்!!!

மக்கள் நீதி மய்யம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In