சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், தனது ஊழியர்களை திருமணம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், என்ன கொஞ்சம் அதட்டலோடு சொல்லியிருப்பதுதான் பிரச்னையாகியிருக்கிறது.
அதாவது, இந்த மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் வேலையைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் மாதத்துக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் தங்களைப் பற்றி சுய விமர்சனக் கடிதம் ஒன்றையும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கடும் ஆட்சேபனை எழுந்ததால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்பதும் இதுவரை தெரியவரவில்லை.
