இன்று மாலை திரிபுராவின் உனோகோடி மாவட்டத்தில் உள்ள குமார்காட்டில் ரதத்தின் உச்சி உயர் அழுத்த கம்பியைத் தொட்டதால் ரத யாத்திரை ஊர்வலத்தின் போது தேர் தீப்பிடித்ததில் இரண்டு சிறார்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜகந்நாதரின் ‘உல்டா ரத யாத்திரை’ திருவிழாவின் போது குமார்காட் பகுதியில் மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
ரத யாத்திரை முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, உடன்பிறந்த தெய்வங்களான இறைவன் பாலபத்ரா, தேவி சுபத்ரா மற்றும் ஜகன்னாதர் ஆகியோரின் புனித இருப்பிடத்திற்குத் திரும்புவதை இந்தத் திருவிழா குறிக்கிறது.
விழாவையொட்டி, இரும்பினால் கட்டப்பட்ட இஸ்கான் (ISKON) கோயில் ‘ரதத்தை’ பக்தர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் இழுத்தனர். ஊர்வலத்தின் போது, ’ரதம்’ தற்செயலாக 133kv மேல்நிலை கம்பிகளுடன் தொடர்பு கொண்டது என்று போலீசார் தெரிவித்தனர்.



இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்