நடிகர் மன்சூர் அலிகான் ரஜினிகாந்த் அரசியலில் ஒரு சுண்டைக்காய் என்று பேசியிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக கடந்த 9ம் தேதி இமயமலை சென்றார். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்த அவர், உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகிஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது அவரின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் வாங்கினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விளக்கம் அளித்த ரஜினிகாந்த் யோகிகள் தன்னை விட சிறுவயது உடையவராக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என்றார். ஆனாலும் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் ரீதியாக ரஜினி எப்படி என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் முன்னதாக அளித்த பேட்டி இங்கே!
இது குறித்து பேசும் போது, “ ரஜினி உண்மையிலேயே மிகவும் நல்ல மனிதர். அவரை எனக்கு நடிகராக மிகவும் பிடிக்கும். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அவர் சிகரெட் பிடிக்கு ஸ்டைல் சத்ரவன் சின்னா ஸ்டைல். அதைப்பார்த்துதான் அவர் செய்தார். அது பிரச்சினையில்லை. அவர் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.
சமீபகாலமாக அவரை பின்னால் இருந்து சிலர் இயக்குகிறார்கள். ஒவ்வொருத்தரும் தன்னுடைய குடும்பத்திற்கு உழைப்பதுதானே நல்லது. அந்த வகையில் அவரும் உழைத்தார். எல்லா சொத்தையும் கர்நாடகாவில் சேர்த்து இருக்கிறார். இவரை சிலர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர் இங்கு 1 லட்சம் பேருக்கு வேலைக்கொடுக்கலாம். ஆனால் செய்யவில்லை. அவர் பணக்காரர்கள் பக்கம்தான் இருப்பார். ஏழைகளின் பக்கம் நிற்கமாட்டார். அரசியலில் அவர் ஒரு சுண்டைக்காய்” என்று பேசினார்.

