Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம்.. அமித்ஷா ஆலோசனைக்கு பிறகு அதிரடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள்
0
மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம்.. அமித்ஷா ஆலோசனைக்கு பிறகு அதிரடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Vignesh Selvaraj
Published: Saturday, June 24, 2023, 21:10 [IST]
இம்பால்: மணிப்பூர் பாலத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோ உயிரிழந்துள்ளனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அரசின் அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதற்கிடையே, மணிப்பூரில் கடந்த 21ஆம் தேதி இரவு 7 மணியளவில் தித்திம் சாலையில் பவுகாக்சான் இகாய் அவாங் லெய்காய் மற்றும் வாக்த ஆகிய பகுதிகளை அடுத்த பாலம் ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ஸ்கார்பியோ ரக நான்கு சக்கர வாகனம் ஒன்றில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த வாகனம் அடையாளம் தெரியாத நபர்களால், பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. குண்டுவெடித்ததில், பாலத்தின் மேற்கு பகுதியில் சில இடங்கள் கடுமையாக சேதமடைந்தன. 3 சிறுவர்களுக்கு லேசான அளவில் காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பவுகாக்சான் இகாய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), வெடிக்கும் பொருள்கள் சட்டம் மற்றும் பிடிபிபி சட்டம் 1984 தொடர்புடைய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, குண்டு வெடித்த வாகனம் சுராசந்த்பூர் பகுதியில் இருந்து வந்துள்ளது என தெரியவந்தது. மணிப்பூரில் மற்றும் அதனை சுற்றியுள்ள எல்லைப் பகுதி முழுவதும் ஊடுருவல்காரர்களின் தொடர்பு பெரிய அளவில் உள்ளது என சந்தேகிக்கப்படும் சூழலில், தேச பாதுகாப்பை முன்னிட்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டுள்ளது. வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று கூடியது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கு வழக்குஎன்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம்: பிரதமர் இதுவரை பேசாதது வேதனை.. அனைத்துக் கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா ஆதங்கம்!
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
The investigation into the recent blast in Manipur has been transferred to the National Investigation Agency (NIA).
Story first published: Saturday, June 24, 2023, 21:10 [IST]

.

Previous Post

குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

Next Post

தேனியில் ‘இளைய மகனுக்கு’ மாவட்டச் செயலாளர் பதவி?! – வாக்கெடுப்பு நடத்திய ஓ.பி.எஸ் | OPS conducted the poll, District secretary post for another son in Theni?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தேனியில் 'இளைய மகனுக்கு' மாவட்டச் செயலாளர் பதவி?! - வாக்கெடுப்பு நடத்திய ஓ.பி.எஸ் | OPS conducted the poll, District secretary post for another son in Theni?

தேனியில் 'இளைய மகனுக்கு' மாவட்டச் செயலாளர் பதவி?! - வாக்கெடுப்பு நடத்திய ஓ.பி.எஸ் | OPS conducted the poll, District secretary post for another son in Theni?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In