தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
“புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். புதிய கல்விக்கொள்கையை கொண்டுவந்து வரலாற்றை மாற்ற முயற்சி செய்கிறார்கள். 56 மொழிகளை ஹிந்தி விழுங்கியுள்ளது. மொழிகளைத் திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்டீர்களா? பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இருமொழிக் கொள்கையை பின்பற்றிய தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள்தான் பல துறைகளில் உயர்பதவியில் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கின்றன.
