Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

M.K.Stalin: `இது கட்சி நிகழ்ச்சி இல்லப்பா’ டு முன்னரே குளித்த யானைகள் வரை – ஊட்டி பயண நிகழ்வுகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 21, 2025
in அரசியல் செய்திகள்
0
M.K.Stalin: `இது கட்சி நிகழ்ச்சி இல்லப்பா’ டு முன்னரே குளித்த யானைகள் வரை – ஊட்டி பயண நிகழ்வுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மே – 12 பிற்பகல்: தமிழக முதல்வர் ஸ்டாலினை வரவேற்க தமிழக விருந்தினர் மாளிகைக்குக் காங்கிரஸ் நிர்வாகிகள் மூவருடன் வந்த ஊட்டி எம்.எல்.ஏ கணேசனை காவல் துறையினர் அனுமதிக்க மறுக்கவே, ஒருவழியாக எம்.எல்.ஏ., மட்டும் அனுமதிக்கப்பட்டார்.

மே – 13 மாலை: தமிழக முதல்வர் ஸ்டாலின் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு பயணித்த நிலையில் மசினக்குடி – தெப்பக்காடு சாலையோரக் குழிகள் அவசர அவசரமாகச் செப்பனிடும் பணி நடைபெற்றது.

மே – 13 : வன விலங்குகள் நடமாடக்கூடிய அடர் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் சராசரியான இடைவெளியில் கொட்டிய மழையிலும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்ததை முதல்வர் கவனித்தாரா எனத் தெரியவில்லை.

மே – 13 : தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் வழக்கமான சீருடையில் வழக்கத்திற்கு மாறாக ஒரே மாதிரியான ஷூ அணிந்திருந்தனர்.

மே – 13 : முதல்வர் ஸ்டாலினின் வருகையையாெட்டி வழக்கத்திற்கு மாறாக வளர்ப்பு யானைகள் வெகு நேரத்திற்கு முன்னதாகவே குளிக்கவைக்கப்பட்டு, உணவு வழங்கும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதனால் யானைகள் ரெஸ்ட் லெஸ் ஆக காணப்பட்டன.

மே – 13 : தெப்பக்காடு யானைகள் முகாமில் நிறுத்தப்பட்ட முதல்வர் பயணித்த வாகனத்தில் இருந்த தேசியக் காெடியை காவலர் ஒருவர் கழற்றிவிட்டு கட்சி காெடியைப் பாெறுத்தினார்.

மே -13 : ஏதோ நியாபகத்தில் கட்சிக் காெடியை வாகனத்தில் பாெறுத்தியதை கவனித்த மற்ற காவலர்கள், இது கட்சி நிகழ்ச்சியில்லை என சொல்ல சுதாரித்துக் காெண்டு இரண்டு கொடிகளும் கழற்றப்பட்டன.

மே – 14 : முதல்வர் ஸ்டாலின் காலை 7.30 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திறந்த வெளி மைதானத்தில் வாக்கிங் செல்ல ஏற்பாடுகள் தீரவிரமாக நடைபெற்று வந்தன, முதோல் ஹவுன்டு இன மோப்ப நாய் வரவழைக்கப்பட்டிருந்தது.

மே – 14 : சைக்கிளில் வந்த சிறுவர்கள்கூட, மைதான வளாகத்திற்குள் சைக்கிள் காெண்டு செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு மைதானத்திற்குள் வந்தனர்.

மே – 14 : சுமார் 11 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை ஆய்வு செய்ய வருவதாகத் தகவல் பரவிய நிலையில், அரசு மருத்துவக்கல்லுாரியை சீருடையணியாத காவல் துறையினர் சுற்றிவளைத்திருந்தது சினிமாவை விஞ்சும் வகையில் இருந்தது.

மே -14 : மாலை முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் தொட்டபெட்டா மலைச் சிகரத்தை காண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தநிலையில் சுமார் 3.30 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தது, 3.52 மணிக்கு டிக்கெட் கவுன்ட்டர் மூடப்பட்டு காெட்டும் மழையில் சுற்றுலாப் பயணிகள் கட்டாயப்படுத்தி காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர் .

மே – 14 : விகடன் இ மேகசினில் ஒளிபரப்பப்பட்ட https://www.facebook.com/share/v/16MHamVRbB/ இந்த லைவ் வீடியாே பரவ, சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டாலும், வெறுமென டிக்கெட் கவுன்ட்டரை போலீசார் திறக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மே – 15 : புகழ் பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

மே – 15 : திறந்து வைத்தபோது அணிந்திருந்த உடை மேடைக்கு வரும்போது மாறியிருந்தது. சொல்லப்போனால் ஊட்டியில் இருந்த 5 நாள்களும் உடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்தியதாகவே தெரிகிறது.

மே – 15 : தமிழக முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உடன் வந்த இளம் பெண் யார் என்ற கேள்வி பலதரப்பினரிடம் எழுந்தது, அது தான் பூங்குழலி, தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க தமிழரசு மகள்.

மே – 16 : முதல்வர் ஸ்டாலின் காலை 7.30 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திறந்த வெளி மைதானத்தில் இரண்டாவது முறையாக வாக்கிங் சென்று திரும்பும்பாேது தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த தாெடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அளித்த மனுவை பெற்றுக்காெண்டார்.

மே – 16 : தமிழக விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க அனுமதி பெற்று அதிகாலை முதல் காத்திருந்த தாெண்டர்களை, பெரும் கெடுபிடிகளுக்குப் பிறகு சிறு சிறு குழுக்களாக முதல்வரைச் சந்திக்க காவலர்கள் அனுமதித்தனர்.

மே – 16 : ஒருகட்டத்தில் 11.30 மணியளவில் கான்வாய் கிளம்ப, நுழைவு வாயிலில் இறங்கிய முதல்வர், காத்திருந்த தொண்டர்களுடன் கைகுலுக்கியும், புகைப்படம் எடுத்துவிட்டுக் கிளம்பினார்.



.

Previous Post

சென்னையை வென்றது ராஜஸ்தான்

Next Post

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள்

பழங்களை பழுக்க வைக்க சட்டவிரோத ரசாயனங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In