அனுராதாபுரம் தாக்குதலில் யாரும் தப்பவில்லை என்று சந்தோஷ் சொன்னார். ஆனால் சீமான் நெருக்கமானவராக இருந்ததால், அவர் சொன்னதை நம்பி தொலைந்தோம். ஏராளமான பணம் கொடுத்து ஏமாந்தோம். சீமான் பேசுவதை நம்பக் கூடியவர்களும் இருக்கின்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக, பாஜக போட்டியிடவில்லை.

அதனால் ஈரோட்டில் இவ்வளவு வாக்கு வாங்கி இருக்கிறேன் என்று சொல்வதற்காக சீமான் இப்படி பேசுகிறார். ஈரோடு தேர்தல் பிரசார மேடையில் யாராவது அடிக்க மாட்டார்களா, அதை வைத்து அரசியல் செய்து வாக்கு வாங்கலாம் எனப் பார்க்கிறார். நாங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.” என்றார்.
