ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஓட்டளித்த பிறகு முதல்வர் அசோக் கெலாட் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (நவ.,25 ) காலை 7 மணி அளவில் துவங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் உள்ள வாக்கு சாவடியில் ஓட்டளித்தார். பின்னர் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
ஒவ்வொரு சமூக மக்களும் எங்களுடன் இருப்பதால் காங்கிரஸ் பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மக்கள் நமது ஆட்சி, திட்டங்கள், உத்தரவாதங்கள் ஆகியவற்றின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

