Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாஜக ஆட்சிக்கு வந்தால், கிடா வெட்ட விடுவார்களா? மக்களிடம் கேட்ட கார்த்தி சிதம்பரம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 12, 2024
in Default
1
பாஜக ஆட்சிக்கு வந்தால், கிடா வெட்ட விடுவார்களா? மக்களிடம் கேட்ட கார்த்தி சிதம்பரம்..
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: “மேல் சாதி பாஜக ஆட்சிக்கு வந்தால், நம் கோயில்களில் நடக்கும் கிடாவெட்டு திருவிழாக்கள், சேவலை நேர்த்திக்கடனாக கொடுக்கும் வழக்கம் என எல்லாவற்றையும் தடை செய்து விடுவார்கள்” என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அதன் தற்போதைய எம்.பி. கார்த்தி சிதம்பரமே களம் இறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம், “இந்த தேர்தல் நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டி சாமி கும்பிட தடை செய்து விடுவார்கள். நமது பழக்கவழக்கங்களை தடை செய்துவிட்டு, சமஸ்கிருத மொழியிலும், மேல்தட்டு முறையிலுமே கோயில்களில் வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிட்டு விடுவார்கள்” என கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார்.

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசிய அடுத்த நாளே, அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். காஷ்மீரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய மோடி, “புனிதமான சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சியை சாப்பிட்டுவிட்டு, பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சிகள் புண்படுத்துகிறார்களே..” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மோடியின் பேச்சை சுட்டிக்காட்டிய கார்த்தி சிதம்பரம், “நான் சொன்னது போலவே பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கிடாவெட்டு, சேவலை நேர்த்திக்கடனாக கொடுப்பதை தடை செய்து விடுவார்கள். வட இந்தியாவின் உயர் ஜாதி சமஸ்கிருத சைவ இந்துத்துவா கலாச்சாரத்தை தான் பாஜக பின்பற்றி வருகிறது. இது, நமது தென் தமிழக மக்களின் நடைமுறைகளுக்கு ஒத்து வராத ஒன்று” என தனது எக்ஸ் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Previous Post

இந்தியாவின் பிரதமர் பேசும் பேச்சா இது? பேசவேண்டியதை பேசாமல், எவர் வீட்டில் என்ன சமைக்கப்பட்டது, சாப்பிட்டார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்…

Next Post

வெள்ளிங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெள்ளிங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் பலி

வெள்ளிங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் பலி

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In