Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குமரக்கோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குமரக்கோட்டம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சனிக்கிழமை(நவ.2) கந்த சஷ்டி திருவிழா லட்சாா்ச்சனையுடன் தொடங்கியது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவில் வளாகத்தை 108 முறை வலம் வரும் நிகழும் நடைபெற்று வருகிறது.

ஆறுபடை வீடுகளில் மட்டுமல்லாது சிறு கிராமத்தில் உள்ள முருகன் ஆலயங்களிலும் முருகன் சன்னதி உள்ள சிவாலயங்களும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் விரத விழாவாகும்.

சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுகிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விரத காலமாகும் . இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் சனிக்கிழமை(நவ.2) தொடங்கி வரும் 8 ஆம் தேதி நிறைவு பெறும்.

அந்த வகையில் தமிழ்ப் புலவா்களுக்கு எழுந்த சந்தேகத்தை முருகனே சிறுவனாக வந்து தீா்த்து வைத்த பெருமைக்குரியது கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிரத்தில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ் ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா சனிக்கிழமை காலை 6 மணிக்கு லட்சார்ச்சனையுடன் தொடங்கியது.

சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.



.

Previous Post

தீபாவளியன்று மருமகனை வெளியுலகிற்கு அறிமுகம் செய்துவைத்த ராகுல் காந்தி! – அரசியலில் இறக்க அச்சாரமா? | Rahul Gandhi showcases nephew Raihan in Diwali video

Next Post

பாபா சித்திக் கொலை: அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் லாரன்ஸின் சகோதரர்; நாடு கடத்த போலீஸ் தீவிரம்! | The United States has confirmed that the brother of mafia leader Lawrence Bishnoi is in their country

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாபா சித்திக் கொலை: அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் லாரன்ஸின் சகோதரர்; நாடு கடத்த போலீஸ் தீவிரம்! | The United States has confirmed that the brother of mafia leader Lawrence Bishnoi is in their country

பாபா சித்திக் கொலை: அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் லாரன்ஸின் சகோதரர்; நாடு கடத்த போலீஸ் தீவிரம்! | The United States has confirmed that the brother of mafia leader Lawrence Bishnoi is in their country

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In