News oi-Jeyalakshmi C
Updated: Sunday, June 25, 2023, 9:27 [IST]
சென்னை: ஜூலை மாதம் அற்புதமான மாதம். ஆனியும் ஆடியும் இணைந்த மாதம். சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் உருவாகப்போகிறது. குரு மங்கல யோகத்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது. என்னென்ன யோகங்கள் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். மேஷம்: மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால் நேர்மறை சம்பவங்கள் அதிகம் நடக்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. சனி வக்ரமடைந்து பயணம் செய்கிறார். தொழில் காரகன் சனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கும்ப ராசியில் உள்ள சனி பகவான் மீது ராசிநாதன் செவ்வாய் பகவானின் பார்வை விழுகிறது. சனி செவ்வாய் சம சப்தமமாக பார்வை படுவதால் வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வக்ரமான சனி வேகத்தை அதிகரிக்கும். புதிய வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் துறையில் தனித்துவம் அடைவீர்கள். குரு பார்வை: காவல்துறை, ராணுவத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். செவ்வாய் பகவான் மீது குரு பார்வை விழுவதால் குரு மங்கல யோகமும் கிடைக்கிறது. வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கோபப்பட வேண்டாம் நிதானமாக பேசுங்கள். உங்களின் புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். சுபகாரியம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பகவான் பார்வை கிடைப்பதால் நீங்கள் திருமண சுப காரியம் தொடர்பாக பேசி முடிக்கலாம். கணவன் மனைவி இடையேயான நெருக்கம் கூடும். காதல் மணியடிக்கும். காதலில் இருப்பவர்களுக்கு பெற்றோர்களின் உதவியோடு ஆசியோடு திருமணம் கை கூடி வரும். நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகளால் சந்தோஷ செய்திகள் தேடி வரும். குழப்பங்கள் நீங்கி இந்த மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தரசிகள்: பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான மாதமும். கணவர் அன்பான பரிசால் திக்குமுக்காட வைப்பார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்களுக்கு சாதகமான நிலையில் கிரகங்கள் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும் ஆரோக்கியத்தோடும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். ஜென்ம ராகு குருவுடன் இருப்பதாலும் கேது களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்தாலும் உங்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் வரப்போவதில்லை. மூத்த குடிமக்கள் வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு சிறப்பு: சூரியனுடன் புதன் இணைந்து பயணம் செய்வதாலும் நான்காம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதாலும் மாணவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். வெளிநாடு பல்கலைக்கழகம், வெளியூர் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். அரசு தேர்வுக்காக தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நவ கிரகங்களின் சஞ்சாரமும் பார்வையும் சாதகமாகவே இருக்கிறது. சூரியன், புதன் கூட்டணி உங்களுக்கு நல்ல செய்திகளை தரும். ஜூலை மாதத்தை மேஷ ராசிக்காரர்கள் உற்சாகத்துடன் கடந்து விடுங்கள்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
July Month Rasi Palan 2023 tamil : (ஜூலை மாத ராசி பலன் 2023 மேஷம்) Check out Mesham Rasi July Matha Rasi Palan prediction from July 1st 2023 to July 31st 2023.

