“அகஸ்தியா தியேட்டர் தனிநபர் சொத்து கிடையாது. அகஸ்தியா அறக்கட்டளையின் கீழ்தான் இயங்கி வந்தது. அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்பதால் இதனை விற்கமுடியாது. ஏற்கனவே, மெட்ரோ பணிகளுக்காக கொஞ்சம் இடத்தை கொடுத்துவிட்டோம். மீதமுள்ள இடத்தில் சங்கரா நேத்ராலயாவுடன் இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டவிருக்கிறோம். உண்மையில் இதற்கான, ஒப்பந்தம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே போடப்பட்டுவிட்டது. அதனால், நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என்று பரப்பப்படும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை. இதற்கான, பேச்சுவார்த்தைக்கூட நடக்கவில்லை. முழுக்க முழுக்க பொய்யான தகவல் இது. பொதுமக்கள் நம்பவேண்டாம்” என்கிறார்கள்.

