Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் தூதுவராக பின்னணி பாடகர் மனோ அறிமுகம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2024
in Default
0
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் தூதுவராக பின்னணி பாடகர் மனோ அறிமுகம்
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் தூதுவர் அறிமுகம் மற்றும் தேர்தல் கீதத்தை மத்திய தேர்தல் பொதுப்பார்வையாளர் அபு இம்ரான் தேர்தல் கீதத்தை வெளியிட்டார்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாநில அளவில், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் தூதுவர் மற்றும் தேர்தல் கீதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் அபு இம்ரான் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் ஆகியோர் தேர்தல் தூதுவர் மற்றும் தேர்தல் கீதத்தை வெளியிட அதை பின்னணி பாடகர் கலைமாமணி இ.மனோ பெற்றுக் கொண்டார். தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட ஸ்ரீபெரும்புதூர், கோவைக்கு அடுத்து 3-ஆவது இடத்தில் திருவள்ளூர் தனி தொகுதி தொகுதி உள்ளது.

அதனால் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் தூதுவராக கலைமாமணி பின்னணி பாடகர் மனோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், கவிஞர் யுகபாரதியின் பாடல் வரிகளில் இசை அமைப்பாளர் சத்யா இசையில், சரவணக்குமார் இயக்கிய தேர்தல் கீதங்களுக்கு கலைமாமணி பாடகர் மனோ பின்னணி பாடியுள்ளார்.திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேர்தல் கீதம் ஒலிக்க போகிறது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புது முயற்சி தான். இதன் ஒரு பகுதிதான் தேர்தல் தூதுவர் அறிமுகம் மற்றும் தேர்தல் கீதம் வெளியீட்டு விழா என அவர் தெரிவித்தார். மேலும் வாக்களிக்க பணம் வாங்க கூடாது என்பதையும் இந்த பாடல் வரிகள் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

அமெரிக்கன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வருடாந்திர கூட்டம்.

Next Post

அடுத்து என்ன? சுனிதா கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆலோசனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அடுத்து என்ன? சுனிதா கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆலோசனை

அடுத்து என்ன? சுனிதா கேஜரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In