அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் தன்னுடைய வருடாந்திர கூட்டத்தினை கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடத்தியது. 1961ம் ஆண்டில் பியுசி படித்த மாணவர்களிலிருந்து கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் கல்லூரியின் சிற்றாலய குரு ஜான் ஜெய காமராஜ் அவர்களின் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. ராஜேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர். தவமணி கிறிஸ்டோபர் பேசும் போது இக்கூடுகை மூலம் முன்னாள் மாணவர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார். முன்னாள் மாணவர்கள் அவர்களின் கல்லூரி கால நாட்களை நினைவுகூர்ந்தனர். அவர்கள் பேசும் போது இந்த கல்லூரி எங்களுக்கு தன்னம்பிக்கை, ஆளுமை திறனை வளர்த்ததினால் நாங்கள் நல்ல வேலையில் இருக்கிறோம்.
இளைஞர் நலக்குழு தலைவர் முனைவர் அருளப்பன் தலைமையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
முன்னாள் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கூடுகையில் கல்லூரி துணை முதல்வர் முனைவர். மார்ட்டின் டேவிட் மற்றும் நிதிகாப்பாளர் முனைவர். பியூலா ரூபி கமலம் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

