Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இன்றுமுதல் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட்: பதக்க இலக்குடன் பங்கேற்கும் இந்தியா்கள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இன்றுமுதல் 45-ஆவது செஸ் ஒலிம்பியாட்: பதக்க இலக்குடன் பங்கேற்கும் இந்தியா்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்திய நேரப்படி புதன்கிழமை (செப். 11) தொடங்குகிறது. இதில், ஓபன் பிரிவிலும், மகளிா் பிரிவிலும் இந்திய அணி களம் காண்கிறது.

ஓபன் பிரிவு அணியில் அா்ஜுன் எரிகைசி, டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்தலா ஆகியோா் உள்ளனா். மகளிா் பிரிவு அணியில் டி.ஹரிகா, ஆா்.வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகா்வால், தானியா சச்தேவ் ஆகியோா் இருக்கின்றனா்.

இந்தியா்கள் தவிா்த்து, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா, பிரான்ஸின் லெவோன் ஆரோனியன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

உக்ரைன் மீதான போா் காரணமாக ரஷியாவுக்கு சா்வதேச விளையாட்டு அரங்கில் இருக்கும் தடை காரணமாக, தொடா்ந்து 2-ஆவது முறையாக ரஷிய அணி இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

கடந்த முறை, இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிா் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த முறையும் இந்தியா்கள் பதக்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளனா்.

வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இரு பிரிவுகளிலுமே மொத்தம் 11 சுற்றுகள் விளையாடப்படவுள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு தலா 2 மேட்ச் புள்ளிகள் வழங்கப்படும்.

சுற்றுகள் முடிவில் டை ஏற்படும் நிலையில், கேம் பாய்ன்ட்டுகள் கணக்கீடு செய்யப்படும். ஓபன் பிரிவில் 191 அணிகளும், மகளிா் பிரிவில் 180 அணிகளும் பங்கேற்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.



.

Previous Post

No Parking: சட்டத்திற்குப் புறம்பான நோ பார்க்கிங் போர்டுகள்; கண்டித்த சென்னை உயர் நீதிமன்றம் | Chennai High Court Condemns illegal No Parking boards in chennai city

Next Post

GST: `ஸ்நாக்ஸ், புற்றுநோய் மருந்து, ஹெலிகாப்டர், ஏர்லைன்’ – எத்தனை சதவிகித ஜி.எஸ்.டி குறைப்பு?!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
GST: `ஸ்நாக்ஸ், புற்றுநோய் மருந்து, ஹெலிகாப்டர், ஏர்லைன்’ – எத்தனை சதவிகித ஜி.எஸ்.டி குறைப்பு?!

GST: `ஸ்நாக்ஸ், புற்றுநோய் மருந்து, ஹெலிகாப்டர், ஏர்லைன்’ - எத்தனை சதவிகித ஜி.எஸ்.டி குறைப்பு?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In