ஸ்நாக்ஸ் தொடங்கி புற்றுநோய் மருந்து வரை நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங்கில் ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. நேற்று புதுடெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 54-வது ஜி.எஸ்.டி கவுன்சில் மீட்டிங் நடைப்பெற்றது.
அந்த மீட்டிங்கில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள்…

ஃபிட்மெண்ட் கமிட்டி (Fitment Committee) அறிக்கைப்படி, ஆன்லைன் கேம்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தப்பிறகு, வருவாய் 412 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
மருத்துவ காப்பீட்டில் இருக்கும் ஜி.எஸ்.டி வரியை குறைக்க ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவிற்கு பீகாரின் துணை முதலமைச்சர் தலைமை தாங்குவார். இந்தக் குழு அக்டோபர் மாத இறுதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த அறிக்கை குறித்து நவம்பர் மாதத்தில் கூடும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
புற்றுநோய் சிகிச்சைக்கான கட்டணத்தை குறைக்க புற்றுநோய் மருந்துகளின் ஜி.எஸ்.டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் குறைக்கப்படுகிறது.
சில ஸ்நாக்ஸ்களின் ஜி.எஸ்.டி வரி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதம் குறைக்கப்படுகிறது.
வெளிநாட்டு ஏர்லைன் கம்பெனிகளுக்கு விதிக்கப்பட்டு கொண்டிருந்த சேவை இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைத்த பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் வரிச்சலுகை பெற்ற பல்கலைக்கழகங்கள் இனி தாங்கள் பெறும் ஆராய்ச்சி நிதிகளுக்கு ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்.

மார்ச் 2026 வரை பெறப்படும் செஸ் வரி ரூ.8.66 லட்சம் கோடியை தொடும். இந்த பணத்தை கடனுக்கு கட்டியப்பிறகு, மீதம் ரூ.40,000 கோடி இருக்கும். ‘இந்த பணத்தை என்ன செய்யலாம்?’ என்பது குறித்து முடிவு செய்ய அமைச்சர் குழு அமைக்கப்படும். ஒருவேளை மார்ச் 2026-க்கு பிறகு செஸ் வரி பெறப்பட்டால், அதற்கான பெயர் மாற்றப்படும்.
மதப் பயணத்திற்கு ஹெலிகாப்டரில் செல்லும்போது, அதன் ஜி.எஸ்.டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதத்திற்கு குறைக்கப்படும்.
இன்னும் எந்தெந்த பொருள்கள்/ சேவைகளுக்கு குறைக்கப்பட வேண்டும், மக்களே?
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
