Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Srilanka: ‘முதல் பூங்கொத்து கொடுத்த இந்தியா; வாழ்த்து சொல்லும் சீனா, அமெரிக்கா’- அநுர எந்த பக்கம்? | New President of Srilanka will give more importance to which country

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2024
in அரசியல் செய்திகள்
0
Srilanka: ‘முதல் பூங்கொத்து கொடுத்த இந்தியா; வாழ்த்து சொல்லும் சீனா, அமெரிக்கா’- அநுர எந்த பக்கம்? | New President of Srilanka will give more importance to which country
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா – இலங்கை உறவில் அநுர அதிபர் ஆகியிருக்கும் நிகழ்வு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினேன், ”ஈழத்தமிழர்களுக்கு எதிரான பல போராட்டங்களில் இந்த ஜனதா விமுக்தி பெரமுனா ஈடுபட்டிருக்கிறது. சுனாமி சமயத்தில் வடகிழக்கு பகுதிகளில் மறுசீரமைப்பு முயற்சிகளை எடுக்கையில் தீவிரவாத அமைப்புடன் கைகோர்ப்பதா எனக் கேட்டு சந்திரிகா பிரதமராக இருந்தபோது அமைச்சரவையிலிருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து வெளியே வந்தவர்தான் அநுர குமாரா. இதனால் அநுராவை தொடக்கத்திலிருந்தே வடகிழக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்து வந்தனர்.

தேர்தல் முடிவுகளிலுமே அது பிரதிபலித்திருக்கிறது. வடகிழக்கு பகுதிகளில் அநுர மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கிறார். இப்போதைக்கு அவர் சிங்களர்களின் ஜனாதிபதியாக மட்டுமே பார்க்கப்படுகிறார். அவர் கடந்த இரண்டு நாட்களாக தன்னை அனைவருக்குமான ஜனாதிபதியாக செயல்படுவேன் என பேசிவருகிறார். அது நம்பிக்கையை அளிக்கிறது. ஆயினும், அவரின் செயல்பாடுகளைப் பொறுத்தே எதையும் தீர்மானிக்க முடியும். அநுர சீனாவுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்தான். சீனாவுக்கு பல முறை நேரில் சென்றிருக்கிறார். சீன தூதரே கூட அநுரவுக்கு ஆதரவாக இலங்கையுள்ள பல அரசியல் கட்சிகளிடமும் பேசியிருக்கிறார். சீனா அநுரவை தங்களுடைய ஆளாகவே பார்க்கிறது. இந்தியாவுடன் அநுரவுக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது. சமீபத்தில்தான் இந்தியாவின் அழைப்பின் பேரில் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரை சந்தித்துவிட்டு சென்றார். இலங்கை சீனாவுக்கு ஆதரவாக இருந்தாலுமே கூட இந்தியாவும் இலங்கையை புறக்கணிக்க முடியாது. இலங்கையும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது.

சில வணிக விஷயங்களுக்கு சீனாவை விட இந்தியாவை இலங்கை சார்ந்திருப்பதுதான் அவர்களுக்கு லாபமாக இருக்கும். அதனால் இருநாடுகளுமே ஆரோக்கியமான உரையாடலை வளர்த்துக்கொள்ளவே விரும்பும். இப்போதைக்கு நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை பெற வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருக்கும். சில மாதங்களுக்கு அவரின் செயல்பாடுகளை பொறுத்துதான் அவரை மதிப்பிட முடியும்.’ என்கிறார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா என எல்லா பக்கமும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவோம் என அநுர வாழ்த்துகளுக்கு நன்றி கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் யார் பக்கம் நிற்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

Tamilnadu News Live September 25, 2024: துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!-today tamilnadu news latest updates september 25 2024

Next Post

துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live September 25, 2024: துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!-today tamilnadu news latest updates september 25 2024

துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி.. அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.. முதல்வர் ஸ்டாலின் சூசகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In