Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாட்டில் பாஜக ஒரு செத்துப் போன பாம்பு.. சீறிய செல்வப்பெருந்தகை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 21, 2024
in Default
0
தமிழ்நாட்டில் பாஜக ஒரு செத்துப் போன பாம்பு.. சீறிய செல்வப்பெருந்தகை..
22
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் பாஜக ஒரு செத்துப் போன பாம்பு.. அதற்கு தமிழ் மண்ணில் என்ன வேலை? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், சீமானை விட குறைந்த வாக்கு வங்கியை கொண்டிருக்கும் பாஜகவை திமுகவுடன் எப்படி ஒப்பிட முடியும்? என்றும் அவர் வினவினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சூறாவளி பாதயாத்திரையை நடத்தி வருகிறார். தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாதயாத்திரையில் பேசிய அண்ணாமலை, திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் செலுத்தும் வாக்குகள், குப்பையில் போடுவதற்கு சமம் என்று தெரிவித்தார். இந்நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

அண்ணாமலை செல்வதற்கு பெயர் நடைப்பயணமா.. ஏங்க நீங்களும் இப்படி சொல்றீங்க. காலால் நடந்து போனால் தான் நடைப்பயணம். சொகுசு காரிலும், வேனிலும் செல்வதற்கு பெயர் நடைப்பயணமா? கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்து சென்றாரே எங்கள் தலைவர் ராகுல் காந்தி. அதற்கு பெயர் தான் நடைப்பயணம். அண்ணாமலை செய்வதற்கு பெயர் ரத யாத்திரை. அத்வானி செய்தார் அல்லவா.. ஏதாவது கலவரத்தை ஏற்படுத்த முடியுமா? எல்லா சமூக மக்கள் மத்தியிலும் ஏதாவது கலகத்தை உருவாக்க முடியுமா? என்று பார்ப்பதற்காக தான் இந்த ரதயாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார்.

திமுக – காங்கிரஸுக்கு போடும் ஓட்டு, குப்பையில் போடுவதற்கு சமமா? இப்படி கீழ்த்தரமாக பேசுவதால் தான் அவர்கள் (பாஜக) நோட்டாவுடன் போட்டிப் போட்டு கொண்டிருக்கிறார்கள். குப்பையில போடுறதை விடுங்க.. உங்களால நோட்டாவுக்கு மேலே ஓட்டு வாங்க முடியுதா? பாமகவை விட, அவ்வளவு ஏன்.. சீமானை விட குறைவான வாக்கு வங்கியை வெச்சிகிட்டு நீங்கள் எல்லாம் பேசலாமா? பாஜக என்பது செத்துப்போன பாம்பு தமிழ்நாட்டுல? தமிழ்நாட்டு மண்ணுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்மதமுமே கிடையாது. ஏதோ அவர்கள் வாய்க்கு வந்ததை பேசிட்டு போறாங்க. அப்படிதான் அவங்களை பார்க்க வேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

Previous Post

சைக்கிள் சின்னம் எங்களுக்கே… தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு!

Next Post

அரசியல் சாசனத்தை மதித்து நடங்கள். நாங்கள் அறவழியில் போராடுவது அரசியல் சாசனம் எங்களுக்கு கொடுத்துள்ள உரிமை – கிசான் மஸ்தூர் கமிட்டி கோரிக்கை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசியல் சாசனத்தை மதித்து நடங்கள். நாங்கள் அறவழியில் போராடுவது அரசியல் சாசனம் எங்களுக்கு கொடுத்துள்ள உரிமை – கிசான் மஸ்தூர் கமிட்டி கோரிக்கை..

அரசியல் சாசனத்தை மதித்து நடங்கள். நாங்கள் அறவழியில் போராடுவது அரசியல் சாசனம் எங்களுக்கு கொடுத்துள்ள உரிமை - கிசான் மஸ்தூர் கமிட்டி கோரிக்கை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In