Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சைக்கிள் சின்னம் எங்களுக்கே… தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 21, 2024
in Default
0
சைக்கிள் சின்னம் எங்களுக்கே… தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜி.கே.வாசன் வழக்கு!
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மக்களவை பொதுத்தேர்தலில் தங்களுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்

கடந்த 1996-ம் ஆண்டு மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் அப்போது ஒதுக்கியது. ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பிறகு தற்போது ஜி.கே.வாசன், தமாகா தலைவராக உள்ளார். இதனிடையே தொடர் தோல்வி மற்றும் வாக்கு வங்கி சரிவு போன்ற காரணங்களால், சைக்கிள் சின்னம் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி, ஜி.கே.வாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அதில், ‘எதிர்வரும் மக்களவை தேர்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார் வாசன். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு மறு விசாரணையை 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Previous Post

எண்ணூர் அம்மோனியா வாயுக்கசிவு… கோரமண்டல் நிறுவனத்திடம் ரூ.5.9 கோடி நிவாரணம் கோரியது அரசு!

Next Post

தமிழ்நாட்டில் பாஜக ஒரு செத்துப் போன பாம்பு.. சீறிய செல்வப்பெருந்தகை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டில் பாஜக ஒரு செத்துப் போன பாம்பு.. சீறிய செல்வப்பெருந்தகை..

தமிழ்நாட்டில் பாஜக ஒரு செத்துப் போன பாம்பு.. சீறிய செல்வப்பெருந்தகை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In