Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுரை மாநகராட்சியில் மேயர் ரூ.5.84 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்; கூட்டத்தை புறக்கணித்தது அ.தி.மு.க.,

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 5, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மதுரை மாநகராட்சியில் மேயர் ரூ.5.84 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்;   கூட்டத்தை புறக்கணித்தது அ.தி.மு.க.,
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை : மதுரை மாநகராட்சியில் 2024 – 25ம் ஆண்டிற்கான ரூ.5.84 கோடி உபரி பட்ஜெட்டை மேயர் இந்திராணி பொன்வசந்த் தாக்கல் செய்தார். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இக்கூட்டத்திற்கு கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். துணைமேயர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் பேசியதாவது: நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. போக்குவரத்தை சீராக்க மாநகராட்சிக்கு ரூ.2500 கோடியில் 4457 கி.மீ., தொலைவிற்கு ரோடுகளை புதுப்பிக்க தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும். முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 1 – 5 ம் வகுப்பு வரை 8298 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் 28 பள்ளிகளில் 6 -10ம் வகுப்பு வரை 1350 மாணவர்களுக்கு தனியார் பங்களிப்பு மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது. இத்திட்டம் வேறு எந்த மாநகராட்சியிலும் செயல்படுத்தவில்லை. வரும் நிதியாண்டில் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.5 கோடி, பள்ளி பராமரிப்புக்கு ரூ.1 கோடி, ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூ.50 லட்சம், உபகரணங்கள் கொள்முதல் செய்ய ரூ.1 கோடி என பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை பாத்திமாநகர், அனுப்பானடி, பாலரெங்காபுரம், பிபீகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.4.8 கோடி செலவில் புதிய சுகாதார நிலையம் கட்டப்படும். சுப்பிரமணியபுரம், கொடிக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.2 கோடியில் கூடுதல் நிலையம் கட்டப்படும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 99.6 சதவீதம் மக்களுக்கு தொற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியில் இரவிலும் குப்பை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய இந்தாண்டு கூடுதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மண்டலங்களிலும் மாடுபிடி, தெருநாய்கள் பிடிப்பதற்கு புதிய வாகனங்கள் வாங்கப்படும். கவுன்சிலர் அலுவலகம் இல்லாத 23 மாநகராட்சி வார்டுகளில் புதிய அலுவலகங்கள் கட்டப்படும். அடிப்படை கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொலைநோக்கு பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

வார்டு மேம்பாட்டு நிதிரூ.25 லட்சமாக உயர்வு

//* பட்ஜெட்டில் கவுன்சிலர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கவுன்சிலர்கள் மேஜையை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.* அ.தி.மு.க., சார்பில் தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் மதுரைக் கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சி கவுன்சிலர்கள் சென்றுவிட்டதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன.* பட்ஜெட் உரையை மேயர் வாசித்து முடிக்கும் வரை அதன் விவரம் கவுன்சிலர்களுக்கு வழங்கப்படவில்லை. கவுன்சிலர்கள் முறையிட்டனர். அதற்கு மேயர் நான் படிப்பதை நீங்கள் கேட்க மாட்டீர்கள். அதனால் உரையை வாசித்தவுடன் வழங்க சொல்கிறேன் என்றார். ஆனாலும் மேயர் காலை 10:35 முதல் 11:23 மணி வரை பட்ஜெட்டை படித்தபோது பெரும்பாலான கவுன்சிலர்கள் கவனிக்கவில்லை. பலர் தாமதமாக கூட்டத்திற்கு வந்தனர்.* கூட்டம் முடிந்த பின் மேயர் சார்பில் கவுன்சிலர்களுக்கு அசைவம், சைவ விருந்து தடபுடலாக நடந்தது.

பட்ஜெட் வரவு செலவு விவரம்:—–விபரம்/வருவாய் மற்றும் மூலதன நிதி/குடிநீர் மற்றும் வடிகால் நிதி/கல்வி நிதி/மொத்தம் (ரூ.கோடியில்)/வருவாய் நிதி வரவு/491.18/156.46/47.41/695.06/மூலதன நிதி வரவு/146.42/454.57/0.00/601.00/மொத்த வரவு/637.60/611.04/47.41/1296.06/—–வருவாய் நிதி செலவு/486.77/113.97/9.55/610.30/மூலதன நிதி செலவு/162.62/509.70/7.60/679.92/மொத்த செலவு/649.39/623.67/17.15/1290.22/உபரி/பற்றாக்குறை/-11.78/-12.63/30.26/5.84/——–

.

Previous Post

இராணிப்பேட்டையில் அதிமுகவின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் : போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசை கண்டித்து முழக்கங்கள்..

Next Post

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் முதல் இந்தியர் உயிரிழப்பு; ஏவுகணைத் தாக்குதலில் கேரள தொழிலாளி பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் முதல் இந்தியர்  உயிரிழப்பு; ஏவுகணைத் தாக்குதலில் கேரள தொழிலாளி பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் முதல் இந்தியர் உயிரிழப்பு; ஏவுகணைத் தாக்குதலில் கேரள தொழிலாளி பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In