Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’விஜய் இதை செய்தால் 2026இல் ஆட்சி அமைப்பது உறுதி!’ தவெக கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன ஐடியா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 9, 2025
in அரசியல் செய்திகள்
1
’விஜய் இதை செய்தால் 2026இல் ஆட்சி அமைப்பது உறுதி!’ தவெக கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன ஐடியா!
36
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அதிமுக உடன் கூட்டணி அமைத்தால், அக்கூட்டணியில் இருந்து அதிமுகவுக்கு என்ன கிடைக்கும் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்தால், எதிர்மறை விளைவுகளே அதிமுகவுக்கு அதிகமாக இருக்கும்.

விஜயின் தவெக கட்சி தேர்தலில் போட்டியிட தேவையான அரசியல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தினார்கள் என்றால் 2026 தேர்தலில் வெற்றி பெற முடியும் என ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

புதிய விருப்பத்தை தேடும் மக்கள்

இது தொடர்பாக தனியார் டிவி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மீது வெறுப்பில் உள்ள பெரும்பகுதி மக்களிடம் இருந்து தவெகவுக்கு ஆதரவு கிடைக்கும். கடந்த 40 ஆண்டுகளாக இந்த 2 கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்துக் கொண்டு இருக்கும் நிலையில், மாற்று அரசியலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பீகாரில் ஜன்சுராஜும், தமிழ்நாட்டில் தவெகவும் கணக்கிடக் கூடிய முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும். மக்கள் புதிய விருப்பத்தை தேடுகிறார்கள் என தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாடலை விட தமிழ்நாடு மாடல் சிறந்தது

தமிழ்நாடு மாடல் மற்றும் வளர்ச்சி என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். டெல்லியில் உள்ள அரசு குஜராத் மாடலை பின்பற்ற சொல்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடலைதான் நாம் பிற்ற வேண்டும். ஆனால் அது தமிழ்நாட்டின் ஆட்சி மாதிரி இல்லை. வகுப்புவாதத்தில் இருந்து விடுபட்டு தமிழ்நாடு உயர்ந்த மட்டத்தில் உள்ளது. ஆனால் முதல்முறையாக பாஜக இரட்டை இலக்க வாக்குகளை பெற்று உள்ளது. ஊழலை பொறுத்தவரை தமிழ்நாடு அரசியலில் உள்ள ஊழல் வேறு எந்த மாநிலத்தையும் குறைந்தது கிடையாது. பிறமாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மோசமாக உள்ளது.

சீக்கிரமாகவே துணை முதலமைச்சர் பதவி

பாஜக போன்ற வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சி தமிழர்களை கவலை அடைய செய்ய வேண்டிய ஒன்று. தமிழ்நாடு முதல் முறையாக வம்ச தலைவரை தேர்ந்து எடுத்து உள்ளது. ஆனாலும் திரு.மு.க.ஸ்டாலின் 40 ஆண்டுகள் பொது வாழ்கையில் இருந்த பின்னர் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது. அரசியல்வாதி, சமூகசேவர் என எந்த அனுபவமும் இல்லாத தனது மகனுக்கு சீக்கிரமாகவே துணை முதலமைச்சர் பதவியை அவர் கொடுத்து உள்ளார். இதைத்தான் குடும்ப அரசியல் என்று நான் சொல்கிறேன்.

தவெக கட்சி ஆட்சி அமைக்கும்

தமிழ்நாடு வளர்ச்சிக்கான பெருமை திராவிடக் கட்சிகளுக்கு செல்லும் என்றால், தமிழ்நாட்டில் நிலவும் ஊழலுக்கும் இந்த கட்சிகளே பழியை ஏற்க வேண்டும்.  தவெக எல்லாவற்றையும் சரியாக செய்தால் அவர்களால் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும். உண்மையாகவே கடினமாக உழைத்து, தேர்தலில் போட்டியிட தேவையான அரசியல் உட்கட்டமைப்பை வலுப்படுத்தினார்கள் என்றால், மக்களின் ஆதரவு அக்கட்சிக்கு கூட்டணி அமைக்காமலேயே கிடைக்கும். தவெக தலைமை கடினமாக உழைக்க வேண்டும். விஜய் ஒரு பிரபலமான நடிகர். அவர் இன்னும் தன்னுடைய கடைசி படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். அவர் அதில் இருந்து முழு நேர அரசியல்வாதியாக மாறி, எந்த தவறும் செய்யாமல் கடினமாக வேலை பார்த்தால், அவர் வெற்றி பெற மிகச்சிறந்த வாய்ப்புகள் உள்ளது.

மக்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தால்…!

கட்சி கட்டமைப்புகளை உருவாக்குவதில் விஜய் பின் தங்கி உள்ளாரா என்று கேட்டால், இப்போதைக்கு நான் ஆமாம் என்றுதான் சொல்லுவேன். அவர் இன்னும் அந்த முயற்சியை தொடங்கவில்லை. அவர் இன்னும் முழு நேர அரசியல்வாதி இல்லை என்பதே அதற்கான காரணம் . மாநாடு நடத்தி கட்சி அறிவிப்பை வெளியிட்டார். முழு நேர அரசியல்வாதி ஆக வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அவர் முழு நேர அரசியல்வாதி ஆகவில்லை. அவர் முழு நேர அரசியல்வாதி ஆன பின்னர் மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் அவருக்கான வெகுமதிகள் கிடைக்கும்.

2026 தேர்தலில் மும்முனை போட்டி இருக்கும்

மாற்றத்தை கொண்டு வருபவர் என்று சொன்னால், மரபுசார்ந்த கட்சிகள் உடன் கூட்டணி வைக்க முடியாது.  2026 தேர்தலில் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவும். கூட்டணி கணக்கு எப்படி அமையும். எந்த கட்சி எந்த பக்கம் செல்லும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் நிச்சயமாக மும்முனை போட்டியாக இருக்கும். அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்குகள் அதிமுக, தவெக கட்சிகளுக்கு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் அது அப்படி கிடையாது. உதாரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால், சென்னை திமுகவின் கோட்டை, அதிமுக ஒப்பீட்டு அளவில் பலவீனமான கட்சி. எனில் மும்முனை போட்டியில் சென்னை வாக்காளர்கள் தவெகவை சவாலாக பார்ப்பார்கள். எனவே சென்னையில் அதிமுகவை விட தவெகவின் வாக்குகளை அதிகமாக பெறும். அதிகாரத்தில் உள்ளதால் உங்கள் வாக்கு நிலையானது என்று அர்த்தமில்லை.

பாஜக கூட்டணி அதிமுகவுக்கு எதிர்மறை விளைவை தரும்

திமுக கூட்டணியில் வாக்குகள் நிறைய நகர வாய்ப்பு உண்டு, அது அதிமுகவுக்கு, நகருமா, தவெகவுக்கு நகருமா என்பது எனக்கு தெரியாது.  பாஜக தொடர்ந்து தங்கள் இருப்பை படிப்படியாக கட்டி எழுப்ப முயற்சிக்கிறார்கள். மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வாக்கு வங்கியை பெறும் என்று நான் சொன்னேன். ஆனால் எதிர்வரும் 2026  சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாஜக, வலிமையான கூட்டணியை உருவாக்காதவரை கணிசமான வாக்குகளை பெறுவது மிக கடினம். ஆனால் பாஜக அப்படி ஒரு கூட்டணி அமைத்தால், அது கூட்டணி கட்சியை விட பாஜகவுக்கே அதிக பலனை கொடுக்கும். அதிமுக உடன் கூட்டணி அமைத்தால், அக்கூட்டணியில் இருந்து அதிமுகவுக்கு என்ன கிடைக்கும் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்தால், எதிர்மறை விளைவுகளே அதிமுகவுக்கு அதிகமாக இருக்கும்.

.

Previous Post

இந்தியர்கள் சாதியை எங்கள் நாட்டிலும் இறக்குமதி செய்கிறார்கள்..!அமெரிக்கா கடும் விமர்சனம்.

Next Post

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி!

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    பெரிய ஐடியா மன்னரா இருப்பார் போல

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In