Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உங்கள் கனவில் மரங்கள் அடிக்கடி வருதா? நீங்க அதிர்ஷ்டசாலிதான்.. நல்ல தகவல் தேடி வருமாம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2023
in அரசியல் செய்திகள்
0
உங்கள் கனவில் மரங்கள் அடிக்கடி வருதா? நீங்க அதிர்ஷ்டசாலிதான்.. நல்ல தகவல் தேடி வருமாம்!
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Spirtuality oi-Jeyalakshmi C
Published: Wednesday, July 5, 2023, 14:38 [IST]
சென்னை: ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நாம் காணும் கனவுகள் சில நேரங்களில் நல்லதையும் தீயதையும் உணர்த்தும். மரங்களும் செடி கொடிகளும் சிலரது கனவில் அடிக்கடி வரும். அந்த கனவுகளுக்கான அர்த்தம் என்ன என்று பலருக்கும் தெரியாது. ஒரு சிலர் மரங்கள் அடர்ந்த வனத்தில் மாட்டிக்கொண்டது போல கனவு காண்பார்கள். பொதுவாக மரங்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்று கனவுகளும் பலன்களும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் கனவில் துளசிச்செடி வந்தால் கடவுளின் ஆசீர்வாதம் குல தெய்வ ஆசி உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்று பொருள். உங்கள் கனவில் மருதாணி செடி வந்தால் உங்களிடம் உள்ள நோய் நொடிகள் விலகுவதை குறிக்கும். உங்கள் கனவில் மலர்செடிகள், பூந்தோட்டம் நிறைய இருப்பது போல் கண்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கப்போகிறது என்று பொருளாகும். உங்களுடைய கனவில் அடிக்கடி தோட்டம் வந்தால் உங்களின் குடும்பம் விருத்தியடைய போகிறது என்பதனை குறிக்கும். தோட்டத்தில் பூக்கள், பழங்கள் கொத்து கொத்தாக இருப்பது போல கனவு வந்தால் குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம். மாதுளை மரம் கனவில் வந்தால் உங்களின் செல்வம் அதிகரிக்கப்போகிறது என்று அர்த்தம். மரம் அல்லது செடி பசுமையாக இருப்பது போல் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்க போகிறது என்று அர்த்தம். செடி மற்றும் மரத்தில் இருக்கும் பூக்களை பறிப்பது போல உங்கள் கனவில் கண்டால், நல்ல அறிகுறியாகும். உங்கள் கனவில் புளிய மரத்தில் நிறைய புளிகள் காய்த்திருப்பது போல் கண்டால் பண வரவு அதிகரிக்கும். மேலும் புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டு. உங்கள் கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்யும் தொழில் மேன்மை அடையும். மேலும் பொருள் வரவும், அயலாரின் இணக்கமும், பாசமும் உண்டாகும். கனவில் அத்தி மரம் வந்தால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற போவதை குறிக்கும். முக்கனி மரங்களை கனவில் காண்பது சிறப்பானது. உங்கள் கனவில் மாமரம் வந்தால் திருமணம் நடைபெறப்போவதை உணர்த்துகிறது. பலா மரம் காய்த்திருப்பதை கனவில் கண்டால் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சனைகள் விலகும். வாழைமரம் குலைதள்ளி நிற்பதை கனவில் கண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதனை குறிக்கும். பிளம்ஸ் மரம் காய்த்து வளர்ந்திருப்பது போல கனவில் வந்தால் உங்களுக்கு தலைமைப்பதவி தேடி வரப்போகிறது என்று அர்த்தமாம். அரச மரத்தை கனவில் கண்டால் அரசாங்க வழியில் மேன்மையும் நல்ல செய்தியும் தேடி வரும். நெல்லி மரத்தை கனவில் கண்டால் பணக்கவலை உங்களை விட்டு விலகும் என்பதை குறிக்கும். தென்னை மரத்தை கனவில் கண்டால் நன்மைகள் கிடைக்க சிறிது தாமதம் ஆகும். பொறுமையோடு காத்திருந்தால் நல்லது நடக்கும் என்று உணர்த்துகிறது. ஓங்கி உயர்ந்த தேவதரு மரத்தை கண்டால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அர்த்தமாம். சப்பாத்திக்கள்ளி செடியை வெட்டி அகற்றுவதாக கண்டால் எதிரிகளின் தொல்லை விலகும். முள்கள் நிறைந்த செடியில் உங்களின் துணி மாட்டி கொண்டது போல கனவு வந்தால், உங்களின் பிரச்சினைகள் விலகப்போகிறது என்று அர்த்தம். செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால் உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும் நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தமாகும். நீங்கள் மரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தம். மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டில் தனிமையில் நடந்து செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு மிக பெரிய நல்ல விஷயம் நடக்க போகிறது என்று அர்த்தம். மலர்கள் கொத்தாக இருப்பது போல கனவு கண்டால் சொத்து சேர்க்கை ஏற்பட போகிறது என்பதை உணர்த்துகிறது. உங்கள் கனவில் பூச்செண்டு வந்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உங்கள் கனவில் ஈச்ச மரம் வந்தால் சொந்த பந்தங்களிடம் விரோத மனப்பான்மை ஏற்ப்பட வாய்ப்பு உண்டு. உங்கள் கனவில் பட்டுப்போன மரத்தை கண்டால்,வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிலோ ஏதோ விரும்பத்தகாத சோகம் நிகழப்போகிறது என்பதை உணர்த்துகிறது. வாடியிருந்த மரம் துளிர்ப்பது போல கனவில் வந்தால் இழந்த செல்வத்தை மீட்கப்போகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் அல்லது பிறரது தோப்பில் இலை, காய் மற்றும் கனிகளை பறிப்பது போல கனவில் வந்தால் வியாதிகள் வரும்.மரம் கீழே விழுவது போலவோ, மரத்தை வெட்டி சாய்ப்பது போலவோ கனவில் வந்தால் நீங்கள் தேவையற்ற வேலையை செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Marangal kanavil vanthal enna palan: (மரங்களும் கனவுகளும் அதன் பலன்களும்) Tree dreams Meaning and Remedies: The dreams we see while in deep sleep are sometimes good and sometimes bad. Trees and vines often appear in some people’s dreams. Many people don’t know what those dreams mean. Some people dream of being trapped in a dense forest of trees. In general, if you see trees in your dream, you can see what the benefits are.
Story first published: Wednesday, July 5, 2023, 14:38 [IST]

.

Previous Post

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; மருத்துவக் குழுவின் விசாரணை அறிக்கை சொல்வதென்ன?!

Next Post

மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சை போடுகிறோம் என்பதா? – அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சை போடுகிறோம் என்பதா? - அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சை போடுகிறோம் என்பதா? - அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In