Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தேர்தல் முடிவுகளில் இழுபறி வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிப்போம்: பல்டி அடிப்பாரா EPS?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 17, 2024
in Default
0
தேர்தல் முடிவுகளில் இழுபறி வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை தெரிவிப்போம்: பல்டி அடிப்பாரா EPS?
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி, உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன் என தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை (ஏப். 17) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் அதிமுக வேட்பாளர் ப.விக்னேஷை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. 2014-க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. ஆனால் 2014 மத்தியில் பாஜக ஆட்சிக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை பத்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை.

இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை.

மத்திய அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு மட்டுமே தமிழ்நாடு வருகின்றனர். மாநில பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை

என மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபடியும் பாஜகவிற்கு அதிமுக செல்லும் என்று நேட்டீசன்கள் கலைத்தது வருகின்றனர்.

Previous Post

“சாப்பிடுற பிஸ்கட்டுக்கு 18% GST, கோல்டு பிஸ்கட்டுக்கு 3% GST”

Next Post

இந்தியாவின் வருமான சமமின்மை தற்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததை விட மோசம் :அறிக்கை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவின் வருமான சமமின்மை தற்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததை விட மோசம் :அறிக்கை.

இந்தியாவின் வருமான சமமின்மை தற்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்ததை விட மோசம் :அறிக்கை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In