Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“பாஜக 400 சீட் வென்றால் ஞானவாபி மசூதியை இடித்து விஸ்வநாதர் கோயில் கட்டுவோம்”- அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 15, 2024
in Default
0
“பாஜக 400 சீட் வென்றால் ஞானவாபி மசூதியை இடித்து விஸ்வநாதர் கோயில் கட்டுவோம்”- அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு..
18
SHARES
29
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“இந்த மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களை வென்றால் மதுராவில் கிருஷ்ணர் கோயில் கட்டப்படும். ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும். பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் மீட்கப்படும்” என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல், தற்போதுவரை 4 கட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்னும் மீதமுள்ள 3 கட்டங்களுக்கான பரப்புரை நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வருகிறது. இந்த தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதில் சிலர் கடும் வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனரும் கூட. இந்நிலையில், டெல்லியில் லஷ்மி நகரில் நடைபெற்ற தேர்தலில் பரப்புரையில் அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா பேசிய கருத்து மிகவும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.

இந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. தற்போது இம்முறை பாஜக 400 இடங்களை கைப்பற்றினால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயிலும், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் கிருஷ்ணர் கோயிலும் கட்டப்படும். மேலும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவுடன் அது சேர்க்கப்படும்.

இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் வைக்கப்படவில்லை. இனி அப்படி இருக்காது. விரைவில் பிரதமர் மோடியின் தலைமையில் காஷ்மீர் நமது நாட்டின் ஒரு பகுதியாக மாறும்.

अबकी बार 400 पार का मतलब है ज्ञानवापी में शिवालय, मथुरा में भव्य श्रीकृष्ण मंदिर और पाकिस्तान अधिकृत कश्मीर वापस भारत में। #DelhiCampaign2024 pic.twitter.com/f3YyPiUh6K

— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) May 14, 2024

இதற்காக ஒவ்வொரு நாளும் போராட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ் அடிக்கடி மதச்சார்பின்மை பற்றி பேசுகிறது, ஆனால் அரசியலமைப்பின் அசல் வரைவில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஹிமாந்தா பிஸ்வா சர்மா?

அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்தான் அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா. 2001 ஆம் ஆண்டு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். காங்கிரஸில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தற்போது அசாம் முதல்வராக இருக்கிறார் ஹிமாந்தா பிஸ்வா சர்மார்.

இந்நிலையில், பாஜகவை சார்ந்தவர்களின் இந்த தொடர் மத ரீதியிலான பேச்சு அடுத்தடுத்த சர்ச்சைகளை தேர்தல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடி, “நான் ஒருபோதும், இந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தமாட்டேன். மோடி மாடலில் ஒரு போதும் இந்து – முஸ்லிம் பிரிவினைக்கு இடமில்லை” என்று கூறியிருந்தார். ஆனால் அதற்குள் அசாம் முதல்வர் மசூதியை இடித்து கோயில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறார். இது பிரதமரின் கூற்றை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Previous Post

மகளிர் இலவச பேருந்து குறித்து L&T நிறுவனத்தின் தலைவர் சர்ச்சை பேச்சு: செக் வைத்த முதல்வர்..

Next Post

முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பேச்சு, பிரபல தொகுப்பாளினி பினாமி பெயரில் 3.5 கோடி சொத்து..? சூப்பில் சவுக்கு சங்கர்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பேச்சு, பிரபல தொகுப்பாளினி பினாமி பெயரில் 3.5 கோடி சொத்து..? சூப்பில் சவுக்கு சங்கர்.

முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பேச்சு, பிரபல தொகுப்பாளினி பினாமி பெயரில் 3.5 கோடி சொத்து..? சூப்பில் சவுக்கு சங்கர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In