Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“அயோத்திக்கு நானும் வரேன்.. எனக்கும் அழைப்பு கொடுத்து இருக்காங்க..” : நித்தியானந்தா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 21, 2024
in Default
0
“அயோத்திக்கு நானும் வரேன்.. எனக்கும் அழைப்பு கொடுத்து இருக்காங்க..” : நித்தியானந்தா..
102
SHARES
165
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில், இதில் கலந்து கொள்ளப்போவதாக இந்தியாவில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் பிறந்ததாக நம்பப்படும் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. மூன்று தளங்களில் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அயோத்தியில் செய்யப்பட்டு வருகிறது.

அயோத்தியில் இப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள் அயோத்திக்கு வரும் நிலையில், ஏற்கனவே பெர்மிட் உள்ளவர்களைத் தவிர யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த அயோத்தி நகரமும் இப்போது போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறது.

அயோத்தி ராமர் கோயில்: இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார் தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தா.. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும் நித்தியானந்தா கூறியுள்ளார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி இப்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைலாசா: இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அவரே கூறி வருகிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த வரலாற்று மற்றும் அசாதாரண நிகழ்வைத் தவறவிடாதீர்கள்! அயோத்தி கோயிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். இது உலகம் முழுவதையும் அலங்கரிக்கும் ஒரு நிகழ்வாகும்.

முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து மதத்தின் உயர் மதத் தலைவர் (நித்தியானந்தாவை அவரது ஆதரவாளர்கள் அப்படி தான் அழைப்பார்கள்) பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்வார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த நித்தியானந்தா: தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் இந்த நித்தியானந்தா.. இவர் கர்நாடகாவில் பிடதியில் ஆசிரமத்தை நடத்தி வந்தார். அப்போது தான் அவர் மீது திடீரென பாலியல் புகார்கள் எழுந்தன. மேலும், அவர் சினிமா நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் வெளியானது. இந்தச் சம்பவம் அப்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்தியானந்தாவின் டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டில் அவர் திடீரென இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார். இதற்கிடையே சில காலமாக இந்துக்களுக்காகத் தனியாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அவரே சொல்லி வருகிறார். மேலும், தனது நாட்டை அமெரிக்கா மற்றும் ஐநா சபை எல்லாம் அங்கீகரித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும், அந்த நாடு எங்கே இருக்கிறது. அது பார்க்க எப்படி இருக்கும் என்று கூட யாருக்கும் தெரியாது. அவரை போலீசார் இன்னுமே கூட தேடித் தான் வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் அவர் திடீரென அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருவதாகத் தடாலடியாக அறிவித்துள்ளார்.

Previous Post

80 பெண்களை ஏமாற்றிய இளைஞர் ; செல்போனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த போலீசார்.!

Next Post

நாதக நிர்வாகி திமுகவினரால் படுகொலை; மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்… சீமான் எச்சரிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாதக நிர்வாகி திமுகவினரால் படுகொலை; மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்… சீமான் எச்சரிக்கை!

நாதக நிர்வாகி திமுகவினரால் படுகொலை; மாநிலம் முழுவதும் போராட்டம் வெடிக்கும்... சீமான் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In