Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

முதியவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
முதியவருக்கு எய்ட்ஸ் பாதித்ததாக தவறான தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்
40
SHARES
65
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாமக்கல்: கோவையைச் சேர்ந்த முதியவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). கடந்த 2017 டிசம்பர் மாதம் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் கண் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு முன் ரத்தம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த பரிசோதனைகள் அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். இதில் அவருக்கு எய்ட்ஸ் நோய் எதுவும் இல்லை என மருத்துவ அறிக்கையை வழங்கி உள்ளனர்.

இதனால் பாதிப்புக்கு உள்ளான கிருஷ்ணசாமி கடந்த 2018ம் ஆண்டு கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தனியார் கண் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விரைவான விசாரணைக்காக கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி கவனக்குறைவுடன் செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வீ.ராமராஜ் உத்திரவிட்டார். இந்த அபராத தொகையை 4 வார காலத்திற்குள் வழக்கு தொடர்ந்த கிருஷ்ணசாமிக்கு வழங்க வேண்டுமெனவும் உத்திரவிட்டார்.

.

Tags: அபரதமஎயடஸதகவலதவறனபததததகமதயவரககமரததவமனககர.5லடசம
Previous Post

மேட்டூர் | காவிரி ஆற்றை ஒட்டிய படித்துறையில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

Next Post

வரலாறு காணாத வெப்பமும், தக்காளி விலை உயர்வும்: குறுகியகால அறுவடைக்கான ஆய்வு செய்யுங்க – வேளாண் அமைச்சர் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வரலாறு காணாத வெப்பமும், தக்காளி விலை உயர்வும்: குறுகியகால அறுவடைக்கான ஆய்வை தொடங்க வேண்டும் - வேளாண் பல்கலை.க்கு அமைச்சர் உத்தரவு

வரலாறு காணாத வெப்பமும், தக்காளி விலை உயர்வும்: குறுகியகால அறுவடைக்கான ஆய்வு செய்யுங்க - வேளாண் அமைச்சர் உத்தரவு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த மருத்துவமனை மீதான வழக்கு ஐந்து வருடங்களாக நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது அவரே முதியவர் இந்த வழக்கை சீக்கிரம் விசாரித்து தீர்ப்பு சொல்லி இருக்கலாம் ஏனெனில் எல்லாமே ஆதாரபூர்வமானது இதில் வாதாடுவதற்கு ஒன்றுமே இல்லை இருப்பினும் அந்த முதியவர் வெற்றி பெற்றார் என்பது ஒரு ஆறுதலான விஷயம் அந்த முதியவருக்கு எனது வாழ்த்துக்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In