Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

”பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புகிறது” – பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
”பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புகிறது” - பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
32
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பசும்பொன்: பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்,

முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மலர் தூவி, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன். தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1,42,80,000 மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12,54,000 மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். தேவர் நினைவிடத்தை மேம்படுத்துவதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களை நினைவு கூர்ந்தார்.

ஆளுநர் மாளிகையா பாஜக அலுவலகமா? தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகையின் எதிரே உள்ள சாலையில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யைப் பரப்புகிறது. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடானது. இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது திராவிடம். இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக பலமுறை வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். பிரதமர் மோடியின் கவனத்துக்கும் இதனைக் கொண்டு சென்றுள்ளோம். இப்போது, டி.ஆர்.பாலு எம்.பி.யை டெல்லி அனுப்பியுள்ளோம், தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து அவர் வெளியுறவு அமச்சரை சந்தித்துப் பேசவுள்ளார். இலங்கைக் கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அவர் வலியுறுத்துவார்” என்று கூறினார்.

முன்னதாக பசும்பொன் வரும் வழியில் இன்று காலை மதுரையில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தினார். அதேபோல், மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.

.

Tags: ஆளநரகணடசமபவததலதடடமடடபசமபனனலபடடபடரலபயபரபபகறதமதலவரமளகவசபபடடஸடலன
Previous Post

உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் அளித்த புகாரில் விசிக பிரமுகர் விக்ரமன் மீது வழக்கு பதிவு

Next Post

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்..! – ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்..! – ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்..! - ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    தேனி மாவட்டத்தில் வனத்துறையினர் 55 வயதான அன்பரசனை நபரை சுட்டு கொலை செய்துவிட்டு அரிவாளால் வெட்டினார் பாதுகாப்பிற்காக சுட்டோம் என்று பொய் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் தாங்கள் கவர்னர் மாளிகை அதிகாரிகள் பொய் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா அரசு அதிகாரிகள் என்றாலே பொய் பித்தலாட்டம் பிராடு இதெல்லாம் இருக்கத்தானே செய்யும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In