Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நடமாடும் மதி அங்காடிகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் – ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள்
0
நடமாடும் மதி அங்காடிகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் – ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விருதுநகர் : மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விற்பனை செய்ய மாவட்டத்தில் நடமாடும் மதி அங்காடிகள் அமைக்கப்படவுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு 3 நடமாடும் மதி அங்காடிகள் அமைத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்டவாறு அமையவுள்ள நடமாடும் மதி அங்காடிகளை இயக்க பின்வரும் விதிமுறைகளுக்குட்பட்டு பயனாளிகள் தேர்வு செயயப்படவுள்ளனர். பயனாளிகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஒற்றைப் பெற்றோர், கணவரால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளிகள், விதவை மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் உறுப்பினர் சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் சார்ந்த சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் (Nசுடுஆ Pழசவயட) பதிவு பெற்றிருக்க வேண்டும். பொருள்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன்அனுபவமுடையவராக இருக்க வேண்டும். உறுப்பினர் சார்ந்த சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓராண்டிற்கு மேல் நிறைவடைந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர் மீது வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வராக்கடன் ஏதும் இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகள் பெற்றிருக்கும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 31ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வளாகம், விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்துள்ளார்கள்.

Tags: collectorself help groupsSHGV.P.jayaseelanvirudhunagarvirudhunagar collectorwomen help groups
Previous Post

திருநங்கையர்- திருநம்பியர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியம் -ல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண செய்தார் உதயநிதி ஸ்டாலின்

Next Post

தமிழ்நாட்டில் இருந்து புதிய நாடாளுமன்ற வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்க செல்லும் கட்சிகள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா: திமுக புறக்கணிப்பு ?

தமிழ்நாட்டில் இருந்து புதிய நாடாளுமன்ற வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்க செல்லும் கட்சிகள்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In