Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எழுத்தாளர் உதயசங்கருக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது – ஆளுநர், முதல்வர் வாழ்த்து 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
எழுத்தாளர் உதயசங்கருக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது - ஆளுநர், முதல்வர் வாழ்த்து 
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய ‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

கோவில்பட்டியில் பிறந்தவரான உதயசங்கர், தமிழகத்தின் நிகழ்கால குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் மிகவும் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார்.

இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதி வரும் 35 வயதுக்குட்பட்ட இளம் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் ‘யுவ புரஸ்கார்’ விருது வழங்கப்படுகிறது. 2023-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்தவரான ராம் தங்கம், முன்னணி நிறுவனங்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றி தற்போது முழுநேர எழுத்தாளராக எழுதி வருகிறார்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, செப்புப் பட்டயம் ஆகியவை கொண்ட விருது புதுடெல்லியில் பின்னர் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்படும்.

ஆளுநர், முதல்வர் வாழ்த்து: ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘ஆதனின் பொம்மை’ தமிழ் நாவலுக்காக சாகித்ய அகாடமி பால புரஸ்காருக்கு தேர்வான உதயசங்கர் மற்றும் ‘திருக்கார்த்தியல்’ சிறுகதை தொகுப்புக்காக யுவ சாகித்யபுரஸ்காருக்கு தேர்வான ராம் தங்கத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ‘ஆதனின் பொம்மை’ என்ற நாவலை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்றுள்ளார் எழுத்தாளர் உதயசங்கர். அதேபோல், இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த ‘திருக்கார்த்தியல்’ சிறுகதைத் தொகுப்புக்காக ‘யுவ சாகித்ய புரஸ்கார்’ விருது பெற்றுள்ளார் ராம் தங்கம். இருவருக்கும் தமிழக முதல்வர் என்ற முறையில் மனமார்ந்த பாராட்டு” என்று கூறியுள்ளார்.

இதேபோல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

.

Tags: ஆளநரஉதயசஙகரககஎழததளரசகதயபரஸகரபலமதலவரவரதவழதத
Previous Post

’கருவாகி உள்ளது அது உருவாக ஒருசில மாதங்கள் ஆகும்’ பாட்னாவில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின் உற்சாக பேட்டி!

Next Post

பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்த கமலா ஹாரிஸ்.. இந்திய- அமெரிக்க உறவு குறித்து நெகிழ்ச்சி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்த கமலா ஹாரிஸ்.. இந்திய- அமெரிக்க உறவு குறித்து நெகிழ்ச்சி!

பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்த கமலா ஹாரிஸ்.. இந்திய- அமெரிக்க உறவு குறித்து நெகிழ்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In