சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தாமதப்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.திமுகவின் மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு மாணவர் சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுநரை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், தேசிய கல்விக்கொள்கையை ஆளுநர் திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.வேந்தர் பட்டம் ஆளுநர் ரவிக்கு ஒரு கேடா? மாணவர்களை வஞ்சிக்கும் ஆளுநர் ராஜ்பவனை விட்டே வெளியேற வேண்டும் என திமுக மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் கோஷமிட, மற்றவர்களும் முழக்கமிட்டனர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed

