Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர்: முத்தரசன் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 16, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர்: முத்தரசன் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரபூர்வமான அரசு இல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் சென்றுள்ளது.

“எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயார்” என அவர் அறிவித்த நிலையிலும் சட்ட முறைகளை நிராகரித்து, மனித உரிமைகளை அலட்சியப்படுத்திய அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அமைச்சர், உயிருக்கு போராடி வரும் நிலையில் அவரது சட்டபூர்வ கடமைகளை கவனிக்கும் பொறுப்பை அமைச்சரவை உறுப்பினர்களிடம் முதல்வர் பிரித்து வழங்கியுள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் முதல்வர் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநரின் சட்டப்படியான கடமைப் பொறுப்பாகும். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராக அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் வன்மத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழக மக்களை தவறாக வழிநடத்தும் உள்நோக்கம் கொண்ட குறிப்புகளுடன் முதல்வர் கடிதத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.

ஆளுநரின் அப்பட்டமான அதிகார அத்துமீறலையும், மலிவான அரசியல் நடவடிக்கையையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் + பாஜக ஆதரவு அரசியலை ஆளுநர் மாளிகையில் இருந்து நடத்துவதை தமிழகம் வினாடிப் பொழுதும் அனுமதிக்காது என்பதை உணர வேண்டும் என எச்சரிக்கை செய்கிறது” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

.

Tags: அரசயலமபபஆளநரஉரவகககறறசசடடநரககடயமததரசனமயறசககறர
Previous Post

ராஜ்பவனை விட்டே வெளியே போ.. ஆளுநர் ரவிக்கு எதிராக கோஷம்.. மாணவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!

Next Post

அரபிக்கடலில் 10 நாள்.. வழக்கத்திற்கு மாறானது பைபர்ஜாய்.. எதை உணர்த்துகிறது? எக்ஸ்பர்ட் சொல்வது என்ன

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரபிக்கடலில் 10 நாள்.. வழக்கத்திற்கு மாறானது பைபர்ஜாய்.. எதை உணர்த்துகிறது? எக்ஸ்பர்ட் சொல்வது என்ன

அரபிக்கடலில் 10 நாள்.. வழக்கத்திற்கு மாறானது பைபர்ஜாய்.. எதை உணர்த்துகிறது? எக்ஸ்பர்ட் சொல்வது என்ன

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In