Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நொடிக்கு நொடி மரணம்..! – வாழத் தகுதியற்ற இடமாக மாறிய காஸா; ஐ.நா கவலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
நொடிக்கு நொடி மரணம்..! – வாழத் தகுதியற்ற இடமாக மாறிய காஸா; ஐ.நா கவலை!

People inspect the damage following Israeli bombardment in Rafah on the southern Gaza Strip on December 29, 2023, amid the ongoing battles between Israel and the Palestinian militant group hamas. (Photo by AFP) (Photo by -/AFP via Getty Images)

38
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக காஸா மாறிவிட்டதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த 3 மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

உருக்குலைந்த கட்டிடங்கள்

உருக்குலைந்த கட்டிடங்கள்

இந்த விவகாரம் தொடர்பாக கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் தற்போது மீண்டும் காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதே சமயம் இந்தப் போருக்கு சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த போதிலும் இஸ்ரேல் எதையும் கண்டுகொள்ளாமல் காஸா மீது குண்டு மழையை பொழிந்து வருகிறது. இதனால் காஸாவில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இதுவரை 22,438 பேர் பலியாகி இருப்பதாகவும் மேலும் 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனிதாபிமான உதவிகள் குழுத்தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ்

ஐ.நா மனிதாபிமான உதவிகள் குழுத்தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ்

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் குழுத் தலைவர் மார்டின் க்ரிஃபித்ஸ் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘போர் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்டன. மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக காஸா மாறிவிட்டது. மனிதாபிமான உதவிகளை செய்ய செல்வோருக்கு 20 லட்சம் மக்களுக்கு உதவுவது என்பது சவாலாக உள்ளது.

இந்த போர் தொடங்கியிருக்கவே கூடாது. இதனை முடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. உடனே போரை நிறுத்த வேண்டும். இந்த 90 நாட்களுமே நரக நாட்கள்தான். நடந்தவை எல்லாமே மனிதாபிமானத்தின் மீதான தாக்குதல்கள் மட்டுமே’ என கூறி உள்ளார்.

Previous Post

உஷார்… அல்வா, சிப்ஸ்களில் அதிகளவில் ரசாயனங்கள் கலப்பு – கேன்சர் வரை கொண்டுசெல்லும் அபாயம்.

Next Post

ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு… திமுக தலைமை அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு… திமுக தலைமை அறிவிப்பு!

ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு... திமுக தலைமை அறிவிப்பு!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த யுத்தத்தை தொடங்கியது ஹமாமஸ் அமைப்பினரே எனவே அதற்கான விலையை கொடுத்து வருகிறார்கள் அதாவது விதைத்ததை அறுவடை செய்கிறார்கள் இதில் பொதுமக்களும் மற்றவர்களும் என்ன சொல்ல முடியும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In