Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உஷார்… அல்வா, சிப்ஸ்களில் அதிகளவில் ரசாயனங்கள் கலப்பு – கேன்சர் வரை கொண்டுசெல்லும் அபாயம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உஷார்… அல்வா, சிப்ஸ்களில் அதிகளவில் ரசாயனங்கள் கலப்பு – கேன்சர் வரை கொண்டுசெல்லும் அபாயம்.
73
SHARES
118
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தென்காசி மாவட்டத்தில், அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ரசாயனங்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட மஸ்கோத அல்வா, சிப்ஸ் என 2,000 கிலோ எடைக் கொண்ட பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அழித்தனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குற்றாலம். மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான இங்கு குற்றால மெயின் அருவி, புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. இதன் காரணமாக தற்போது இரண்டாம் கட்ட ஐயப்ப சீசன் துவங்கி உள்ளது.

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், தினந்தோறும் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், சென்று திரும்பும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கில் குற்றாலத்திற்கு வந்து புனித நீராடி செல்கின்றனர். இப்படி சபரிமலைக்குச் சென்று விட்டுத் திரும்பும் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் தெரிந்தவர்கள், உறவினர்கள், குடும்பத்தினருக்கு என்று குற்றாலத்தில் கிலோ கணக்குகளில் மஸ்கோத் அல்வாவையும், சிப்ஸ் பாக்கெட்டுகளையும் வாங்கி செல்கின்றனர்.

மஸ்கோத் அல்வா

மஸ்கோத் அல்வா

குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களைக் குறிவைத்து ஏராளமான ஏத்தங்காய் சிப்ஸ், மஸ்கோத் அல்வா கடைகளும் செயல்பட்டு வருகின்றன. குற்றாலத்தில் சில பகுதிகளில் தரம் குறைவான ரசாயன பொடிகளைப் பயன்படுத்தி மஸ்கோத் அல்வா தயார் செய்யப்படுவதாகத் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியனுக்கு ரகசிய புகார்கள் சென்றது.

பேக்கிங் செய்யப்பட்ட மஸ்கோத் அல்வா

பேக்கிங் செய்யப்பட்ட மஸ்கோத் அல்வா

இதையடுத்து, நேற்று முன் தினம் ஜனவரி 4ம் தேதி இரவு குற்றாலம் பகுதியில் அவர் திடீர் என்று தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான நான்கு குடோன்களில் ஆய்வு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், மஸ்கோத் அல்வா தயார் செய்வதற்காக மைதா மாவுகள் பேரல் பேரலாகக் கலக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அதிகளவில் கலர் சாயப் பொடிகள் கலக்கப்பட்டு மஸ்கோத் அல்வா தயார் செய்வதும் கண்டறியப்பட்டது.

மஸ்கோத் அல்வா தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மைதா மாவு கலவை

மஸ்கோத் அல்வா தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மைதா மாவு கலவை

சோதனையில் ரசாயன பொடிகள் கலந்த 2 டன் மஸ்கோத் அல்வாவும், முறையான பேக்கிங், காலாவதி, தயாரிப்பு தேதிகள் இல்லாத 1 டன் சிப்ஸ் உள்ளிட்டவையும் ஆய்வில் கண்டறியப்பட்டன. இதையடுத்து, 2 டன் மஸ்கோத் அல்வா மற்றும் விற்பனைக்குத் தயார் நிலையிலிருந்த 1 டன் சிப்ஸ் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதையடுத்து, அல்வா தயாரித்த நிறுவனங்களுக்கு தலா 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குற்றாலத்தில் தொடரும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Previous Post

தமிழ்நாடு அரசிற்கு கடும் நெருக்கடி – அம்மோனியா வாயு கசிவால் அவதிப்படும் 32 கிராம மக்களுக்கு தீர்வு என்ன?

Next Post

நொடிக்கு நொடி மரணம்..! – வாழத் தகுதியற்ற இடமாக மாறிய காஸா; ஐ.நா கவலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நொடிக்கு நொடி மரணம்..! – வாழத் தகுதியற்ற இடமாக மாறிய காஸா; ஐ.நா கவலை!

நொடிக்கு நொடி மரணம்..! - வாழத் தகுதியற்ற இடமாக மாறிய காஸா; ஐ.நா கவலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In