புதுக்கோட்டை விஜய் பேலஸில் ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் தேதி என இரு தினங்கள் பிளஸ் டூ மாணவ, மாணவியருக்கு கல்வி வழி காட்டி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் நம்பர் 1 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் மதுரைக்கு அருகில் உள்ள சோளங்குரனியில் உள்ள சமூக சேவகர் எம். ரவிச்சந்திரன் அவர்கள் இவருடைய கிராமத்தில் மண்வளத்தை மலட்டு தன்மை அடைய செய்யும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கேரி பேக் இவைகள் இல்லாத கிராமமாக மாற்றி வருகிறார். மேலும் மண்வளத்தை பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இவரைப் பாராட்டி புதுகை வரலாறு நாளிதழ் சார்பில் நிறுவனர் சு. சிவசக்திவேல் தலைமையில் சாதனையாளர்களுக்கான விருதை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா அவர்கள், டீக்கடை உரிமையாளர் எம். ரவிச்சந்திரனை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை போத்தி நினைவு பரிசு வழங்கினார். உடன் தேசிய நல்லாசிரியர் கவிஞர் தங்கமூர்த்தி, முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, ஆலோசகர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன் மற்றும் கல்வியாளர்கள் உடன் உள்ளனர்.



