Last Updated:
பொம்மலாபுரா கிராமத்தில் புலி அச்சம் காரணமாக, கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளை கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் பொம்மலாபுரா கிராமத்தில் புலி ஒன்று சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் இகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், நிகழ்விடத்திற்குச் சென்ற வனத்துறையினர் புலியை பிடிக்க ஆங்காங்கே கூண்டுகளை வைத்ததாக தெரிகிறது.
எனினும், காலை 8.30 மணிக்கு தகவல் அளித்த நிலையில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, காலை 10 மணிக்கு வனத்துறை அதிகாரிகள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், புலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் வனத்துறை அதிகாரிகளை அடைத்தனர்.
மேலும் புலியை பிடிக்க வனத்துறையினர் தாமதமாக வந்ததுடன், மெத்தன போக்கு காட்டியதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகளை, சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு கிராம மக்கள் திறந்துவிட்டனர். புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
September 10, 2025 11:34 AM IST
கிராமத்தில் சுற்றிய புலி.. மெத்தனம் காட்டிய வனத்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் கொடுத்த நூதன தண்டனை!

