நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுரை வெற்றிக்குமரன் சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் புதுக்கோட்டை சுப.தனசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர் நான் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
வெற்றிக்குமரன் சீமானுக்கு எழுதிய கடிதத்தில் தன்னை நீக்க தலைவரான சீமானுக்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக் காட்டினார் அது போல மீண்டும் ஒரு மாநில ஒருங்கிணைப்பாளரை சீமான் கட்சியை விட்டு நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுப.தனசேகரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
“இன உணர்வோடும், மான உணர்வோடும், வாழ்வில் பெரும்பகுதியை எவ்வித எதிர்பார்ப்பக்களும் இன்றி செலவிட்டும், பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட குடும்ப நலன்கள் மீது முழுவதுமாக பின் தொடர முடியாமலும், வயது வாலிபம் என எல்லாவற்றையும் அர்பணித்து தொடர்ச்சியாக இந்த தமிழ்தேசிய அரசியல் மற்றும் அதிகாரத்தின் தேவை என்பது இரு நிலங்களின் பிரதான ஒன்றாக, காலம் நமக்கு கையளித்து இருப்பதாக நம்பி, தங்களை பின்தொடர்ந்து வந்த எங்களை இப்படி திட்டமிட்டு புறக்கணித்து வருவது, இன ஓர்மையின் அடித்தளமான நகர்வுகளை கேள்விக்குறியாகுவதோடு, எந்த லட்சியத்திற்காக இத்தனை காலம் அரசியல் தத்துவார்த்த சித்தாந்தங்களால் முரண்பட்டு உள்ள எதிரிகளின் தரப்பிற்கு இந்த செயல் வலு சேர்க்கும் வகையில் அமைந்து விடும் என்பதோடு. இனி வரும் காலங்களில் எங்களுக்கு நடந்தது போல இக்கட்சியில் பொறுப்பில் இருக்கும் மாநில, மண்டல பொறுப்பாளர்கள் தொடங்கி, ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் என இந்த கட்சியை உளமார நேசித்து நிற்கும் எவர் ஒருவருக்கும் இப்படியான அநீதியை கொண்ட நெருக்கடிகள் மற்றும் மன உளைச்சல் வந்து விடக்கூடாது என அன்புடன் நினைவூட்டி, இது குறித்து ஆக்கப்பூர்வமான தங்களது பதில்களை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன்” என்று மனமுருகி எழுதியுள்ளார்..






வெற்றி குமரன கட்சியிலிருந்து நீக்க முடியாது அப்படின்னு வெற்றி குமரன் தான் சொன்னா இப்ப கட்சியில் இருந்து நிக்கியாச்சா என்ன கிழிக்க போறான்