திருச்சி, திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் கடந்து செல்ல வேண்டும். அப்படி அவர்கள் கடந்து செல்ல இதுவரை ஒரு பாலம்கூட இல்லாத அவல நிலை உள்ளது. ஒரு தென்னை மரத்தைப் பாலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
இது குறித்து இந்த ஊர் மக்களிடம் பேசும்போது. “இந்த கொடிங்காலில் கிட்டத்தட்ட 50 வருடத்திற்கும் மேலாகவே பாலம் இல்லாம தான் இருக்கு. எங்க தாத்தன் பூட்டன் காலத்துல இருந்து இந்த நிலைமை தான் எங்களுக்கு. கொடிங்காலுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இருக்குது. கொடிங்காலுக்கு இந்த பக்கம் இருக்கவங்க நல்லா விவசாயம் செஞ்சுட்டு இருக்காங்க. ஆனா அந்த பக்கம் நிலம் இருக்கவங்க வயலுக்கு போகவே வழி கெடயாது.
