Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Exclusive | டெனால்ட் டிரம்ப்பின் இந்திய பயணம்.. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
Exclusive | டெனால்ட் டிரம்ப்பின் இந்திய பயணம்.. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தகவல்! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 10:10 PM IST

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன், நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய சிறப்பு நேர்காணல் பங்கேற்றார்.

நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி - அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி – அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். மும்பை விமான நிலையம் வந்தடைந்த மார்கோ ரூபியோ மற்றும் அவரது மனைவி ஜெனட் ரூபியோவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசை சந்தித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்துரையாடினார். பின்னர் மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மும்பையில் நடைபெறும் ஃபிரீடம் 250 எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்கோ ரூபியோ, தாஜ் ஹோட்டலில் உள்ள 2008 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த மார்கோ ரூபியோ, இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன், நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய சிறப்பு நேர்காணல் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, குவாட் உச்சிமாநாடு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சாத்தியமான இந்தியப் பயணம் குறித்துக் கேட்கப்பட்டபோது, “இந்த ஆண்டு இறுதிக்குள் குவாட் உச்சிமாநாடு நடைபெறும் என்பதே எங்கள் நம்பிக்கை. அதை நாங்கள் மணிலாவில் உள்ள ஆசிய மாநாட்டில் நடத்தப் போகிறோம் என்று இப்போது ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் அது நிச்சயம் நடக்கும். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.” என்று கூறினார்.

அப்போது டிரம்ப் பதவியேற்ற உடனேயே, வெளியுறவுத்துறை அமைச்சராக அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தாம் பங்கேற்றதை நினைவு கூர்ந்தார். மேலும் அவர் கூறுகையில், “அட்லாண்டாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் மற்றொரு சந்திப்பை நடத்த உள்ளோம். மேலும் இன்னும் சில வாரங்களில் இங்கு நடைபெறும் ஆசிய தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஆவலுடன் உள்ளோம்,” என்று அவர், டிரம்பின் சாத்தியமான இந்தியப் பயணம் குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடாமல் கூறினார்.

முதலில் 2025-ல் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் நான்கு உறுப்பு நாடுகளும் இன்னும் வருடாந்திரக் கூட்டத்தை நடத்தவில்லை. கடைசி குவாட் உச்சிமாநாடு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமையில், 2024 செப்டம்பர் 21 அன்று டெலாவேர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

அமெரிக்கக் குழந்தைகள் அனைவருக்கும் SpaceX பங்கு! – எலான் மஸ்க்கின் $10.5 பில்லியன் திட்டம்!/ SpaceX Shares for Every American Child: Elon Musk’s $10.5 Billion Plan

Next Post

காவல்துறையின் வீரத்தையும் பாதுகாப்புப் பணிகளையும் பறைசாற்றும் ஆயுதக் கண்காட்சி | An arms exhibition showcasing the valour and security operations of the police force

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவல்துறையின் வீரத்தையும் பாதுகாப்புப் பணிகளையும் பறைசாற்றும் ஆயுதக் கண்காட்சி | An arms exhibition showcasing the valour and security operations of the police force

காவல்துறையின் வீரத்தையும் பாதுகாப்புப் பணிகளையும் பறைசாற்றும் ஆயுதக் கண்காட்சி | An arms exhibition showcasing the valour and security operations of the police force

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In