Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ப்ரணவ் ஜுவல்லா்ஸ் மோசடி வழக்கு : பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ப்ரணவ் ஜுவல்லா்ஸ் மோசடி வழக்கு : பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்..!
17
SHARES
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
prakash-raj-eps

ப்ரணவ் ஜுவல்லா்ஸ் மோசடி வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட ப்ரணவ் ஜுவல்லரிக்கு மதுரை, நாகா்கோவில், புதுச்சேரி, சென்னை உள்பட 8 கிளைகள் இருந்தன. இந்தக் கடை நிா்வாகத்தினா், பல்வேறு புதிய நகை சேமிப்புத் திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் அதிக பணம் வசூலித்தனா்.

ரூ.100 கோடி அளவுக்கு நடந்த இந்த மோசடி தொடா்பாக வழக்குப் பதிவு செய்த திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவினா், கடந்த அக்டோபா் 19-ஆம் தேதி அந்தக் கடைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினா்.

பிரகாஷ்ராஜுக்கு அழைப்பாணை: ப்ரணவ் ஜுவல்லா்ஸ் நிா்வாகத்தினா் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக அமலாக்கத் துறையினா் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, தமிழகம் முழுவதும் அந்த கடைக்கு தொடா்புடைய சுமாா் 11 இடங்களில் சோதனை நடத்தினா்.

இதில், கணக்கில் வராத 11.60 கிலோ தங்க நகைகள், ரூ.23.70 லட்சம் ரொக்கம், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக அந்த மோசடியில் தொடா்புடைய நபா்களிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ப்ரணவ் ஜுவல்லா்ஸ் விளம்பரங்களில் நடித்த பிரகாஷ்ராஜுக்கு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். அழைப்பாணையின்படி, ஓரிரு நாள்களில் விசாரணைக்கு நடிகா் பிரகாஷ்ராஜ் ஆஜராவாா் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

.

Previous Post

சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை..! : போட்டு உடைத்த உச்சநீதிமன்றம்.

Next Post

மகாசுசீந்திரன் 13 லட்சம் அபேஸ்..! – மதுரை நகர் பா.ஜ., நிர்வாகிகளிடையே மோதல்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாசுசீந்திரன் 13 லட்சம் அபேஸ்..! – மதுரை நகர் பா.ஜ., நிர்வாகிகளிடையே மோதல்.

மகாசுசீந்திரன் 13 லட்சம் அபேஸ்..! - மதுரை நகர் பா.ஜ., நிர்வாகிகளிடையே மோதல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In