டெல்அவிவ்: இஸ்ரேல் சென்றிருந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவை சந்தித்து பேசினார்.
இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் (எக்ஸ்) நிறுவனங்களின் தலைவராக செயல்பட்டு வருபவரும் பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், யூத சமூகத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். போர் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பரவும் தவறான தகவல்கள், வீடியோக்களை எலான் மஸ்க் அகற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இஸ்ரேல் சென்றுள்ள எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து பேசினார்.

