Mirror Now தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரேலிய அதிகாரி, நெறியாளரின் புடவையின் நிறங்கள் குறித்து வெறுப்பை உமிழ்ந்துள்ளார். “நீங்கள் பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களிலான புடைவையை அணிந்துள்ளதால், நானும் வேண்டும் என்றே வெள்ளை-நீல நிற ஆடையை அணிந்து வந்துள்ளேன்”, என அந்த இஸ்ரேலிய அதிகாரி கூறினார்.
“மதத்தை வைத்து நிறங்களை பிரிக்க வேண்டாம், இது சில நேரங்களில் எங்களுடைய நாட்டிலும் நடக்கும், நான் அணிந்து வந்துள்ள புடவை எனது பாட்டி உடையது மட்டுமே, இது எந்த தரப்பினருக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் இல்லை”, என நெறியாளர் விளக்கினார். தொடர்ந்து, “அந்த புடவையை வேறு நிகழ்ச்சிகளுக்கு சேமித்து வையுங்கள்”, என இஸ்ரேலிய அதிகாரி கூறியதற்கு, “நான் என்ன அணிய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன், நீங்கள் அல்ல,
மேலும் உண்மை பல்வேறு கோணங்களில் இருந்து வரும், ஒரு கோணம் இஸ்ரேலில் இருந்தும் மற்றொன்று காசாவில் இருந்தும் வருகிறது, நான் எப்படி அதை பார்க்கிறேன் என்பதை வைத்தே நான் பேசுவேன் “, என நெறியாளர் அந்த இஸ்ரேலிய அதிகாரிக்கு அறிவுறுத்தினார்.

