Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’ஷர்மிளா மீண்டும் வந்தால் வேலையில் சேர்த்துக் கொள்ள தயார்’ பேருந்து உரிமையாளர் பேட்டி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
’ஷர்மிளா மீண்டும் வந்தால் வேலையில் சேர்த்துக் கொள்ள தயார்’ பேருந்து உரிமையாளர் பேட்டி
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

”கனிமொழி மேடம் மீது பர்சனலாக திமுக மீது மரியாதை உள்ளது. எனது சித்தப்பா திமுக அவைத்தலைவராக இருந்தவர். அந்த பெண்ணிடம் ஓட்டுநர் வேலை தரும்போதே இங்குள்ளவர்கள் இது பிரச்னையாகும் என்று சொன்னார்கள்” – பேருந்து உரிமையாளர். கோவையை சேர்ந்த ஷர்மிளா, காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லும் வழித்தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி வந்தார். கோவையின் முதல் பெண் ஓட்டுநரான அவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் இயக்கும் பேருந்தில் பயணமும் செய்துள்ளனர். இன்றைய தினம் திமுக எம்பி கனிமொழி, ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின் போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்பி வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஓட்டுநர் ஷர்மிளா நீக்கம்

கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணிநீக்கம் செய்துள்ளார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளா உடன் பேருந்து ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஷர்மிளா பேட்டி

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓட்டுநர் ஷர்மிளா, ”கனிமொழி மேடம் என்னை பார்த்துவிட்டு போக வந்திருந்தார்கள். எங்கள் வண்டியில் பெண் நடத்துநர் ஒருவரை நியமித்துள்ளார்கள், அந்த நடத்துநர் கனிமொழியிடம் மனம்புண்படும்படி நடந்துள்ளார்.

இது குறித்து ஓனரிடம் சொல்லும் போது ’நீ பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருத்தரையும் கூட்டிடு வர’ என்றார். கனிமொழி மேடம் 23ஆம் தேதி வர உள்ளார் என்பதை பேருந்து மேனேஜரிடம் சொல்லி இருந்தார். ஆனால் அவர் அதை பற்றி சொல்லவே இல்லை என்று மறுத்துவிட்டார். இது குறித்து என் அப்பா பேசும்போது வேண்டுமென்றால் வேலையைவிட்டு நின்றுகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்” என கூறி இருந்தர்.

பேருந்து உரிமையாளர் விளக்கம்

ஷர்மிளா பணிநீக்கம் குறித்து பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் துரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ”என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆபீஸ் 11.30 மணிக்கு வந்தார்கள், நான் வேலையை ரிசைன் பண்ணப்போறேன் என்று அந்த பெண் சொன்னார்கள். காலையில் கனிமொழி மேடம் வந்த போது லேடி கண்டெக்டர் டிக்கெட் கொடுத்தது அசிங்கமாக போய்விட்டது என்று சொன்னார்.

கனிமொழி வராங்க என்று முன்கூட்டியே சொல்லி இருந்தால் இது போன்ற மிஸ்டேக் நடந்திருக்கதே என்று கூறினேன். நான் அவர்களை வேலைவிட்டு நின்னுகோங்க என்று எதுவும் சொல்லவில்லை. மீண்டும் வேலைக்கு வந்தால் சேர்த்துக் கொள்ள தயார், மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.

கனிமொழி மேடம் மீது பர்சனலாக திமுக மீது மரியாதை உள்ளது. எனது சித்தப்பா திமுக அவைத்தலைவராக இருந்தவர். அந்த பெண்ணிடம் ஓட்டுநர் வேலை தரும்போதே இங்குள்ளவர்கள் இது பிரச்னையாகும் என்று சொன்னார்கள்” என கூறினார்.

.

Previous Post

பிரதமர் மோடிக்கு எதிராக கிருஸ்தவர்கள் போராட்டம்.

Next Post

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு: உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In