நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுவரும் கட்டிடத்தில் மேலே கழிப்பறையும் கீழே கடையும் கட்டப்படுகிறது.
மாநகராட்சியில் சிமெண்ட் சாலைகள் போட்டு (with in the contract liablity period )ஒரு சில வாரங்களில் தரம் இல்லாததால் மீண்டும் மீண்டும் பழுது பார்த்து வருவதை ஆங்காங்கே காணமுடிகிறது.
அப்படி இருக்க கீழே கடையும் மேலே கழிப்பறையும் கட்டினால், கழிப்பறை கழிவு நீர் கசிவு ஏற்பட்டால், கடையில் வியாபாரம் நடக்குமா ? தின்பண்டங்கள் விற்றால் சுகாதாரம் எப்படி பேணி காக்கப்படும் ? கடையை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடாதா ?
இதை திட்டமிட்டவர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறையாவது எடுத்து கூறுமா ?

