Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2023
in அரசியல் செய்திகள்
0
புதுசு புதுசா பண்றாங்களே.. சென்னையில் “TN Talk” நிகழ்ச்சி! அப்டீன்னா என்ன? மிஸ் பண்ணிடாதீங்க..
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் ஆய்வாளர்கள் சர்வதேச மற்றும் அளவில் பல்துறை புகழ்பெற்ற அறிஞர்களின் நிபுணர்கள் உரையாற்றும் TN Talk என்ற நிகழ்ச்சி 4 வது முறையாக நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பள்ளிக்கல்வித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் ஆய்வாளர்கள் சர்வதேச மற்றும் அளவில் பல்துறை புகழ்பெற்ற அறிஞர்களின் நிபுணர்கள், உரைகள் அறிவியல் மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் TN talk என்ற பெயரில் நிகழ்த்தப்படும். இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டார். அதை தொடர்ந்து “TN Talk” (Tamil Nadu Talk) எனும் தொடர் நிகழ்ச்சிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலை அரங்கில், நான்காவது “TN Tak” நிகழ்ச்சி, நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், மாலை 6 மணிக்கு ரமோன் மகசேசே விருது பெற்ற டாக்டர் பிரகாஷ் ஆம்தே மற்றும் டாக்டர் மந்தாகினி ஆம்தே ஆகியோர் பங்கேற்று, ” Odyssey of Community Service: A Personal Reflection” என்ற தலைப்பில் உரையாற்றி பார்வையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்தான். விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் www.youtube.com/ACLChennai என்ற யூடியூப் சேனலில் நேரலையிலும் ஒளிபரப்பப்படும். டாக்டர் பிரகாஷ் ஆம்தே ராமன் மகசேசே விருது பெற்றவரும் இந்தியாவின் நவீன காந்தி என்றும் அழைக்கப்படுபவருமான திரு பாபா ஆம்தேவின் மகன் ஆவார். மருத்துவர்களான டாக்டர் பிரகாஷ் ஆம்தே மற்றும் டாக்டர் மந்தாகினி ஆம்தே ஆகிய இருவரும் மகாராஷ்டிராவின் ஹேமல்காசா கிராமத்தில் உள்ள மக்களின் நலனிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். டாக்டர் பிரகாஷ் ஆம்தே 1973 இல் லோக் பிராதாரி பிரக்லாப் என்ற திட்டத்தைத் தொடங்கினார், இது மதுரா கோண்டில் இருந்து பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு உதவியது. பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் லோக் பிராதாரி பிரக்லாப் தவாகனாவை உருவாக்க அவரது திட்டம் வழிவகுத்தது.

இளம் காட்டு விலங்குகளில் தாய் விலங்குகள் கிராம மக்களால் உணவுக்காக வேட்டையாடப்படுகிறது என்பதால், “அனிமல் ஆர்க்” என்றழைக்கப்படும் காட்டு விலங்குகளுக்காக ஒரு அனாதை இல்லத்தையும் டாக்டர் பிரகாஷ் ஆம்தே தொடங்கியுள்ளார். அவரது மனைவி டாக்டர். மந்தாகினி ஆம்தே தனது கணவரின் கனவுகளைப் பின்பற்ற அவருக்கு உதவி வருகிறார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் இந்த இருவரின்ன் உரையை கேட்கவும் கலந்துரையாடவும் வாசகர்களையும் பொதுமக்களையும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக இயக்ககம் அன்புடன் அழைக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

.

Tags: ACLChennaianbil mahesh poiyamozhianna centenary librarylibrarymk stalin singapore visitOdyssey of Community Service: A Personal Reflectionpolitical newsstalin singapore visitthiruma speech latestthiruma today newsthiruma today speechthirumavalavanthirumavalavan interviewthirumavalavan padalthirumavalavan speechthirumavalavan speech latestthirumavalavan speech todaythirumavalavan teachers protestthirumavalavan today speechthirumavalavan varalarutirumala today episodetirumala today news tamilTn talkTNTALKv newsv news 27vendhar newsviral newsvnewsyoutubeyoutube channel
Previous Post

“காவல்துறை அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால், 14 உயிர்கள் பறிபோயிருக்காது” – அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன்

Next Post

மயான பூமிகளில் ‘சேவைகள் இலவசம்’ என்று அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மயான பூமிகளில் 'சேவைகள் இலவசம்' என்று அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

மயான பூமிகளில் 'சேவைகள் இலவசம்' என்று அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In