Tuesday, November 3, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புது இன்னிங்ஸ்.. ஆந்திர அரசியலில் கால் பதிக்கும் அம்பத்தி ராயுடு.. எந்த கட்சி தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2023
in அரசியல் செய்திகள்
0
புது இன்னிங்ஸ்.. ஆந்திர அரசியலில் கால் பதிக்கும் அம்பத்தி ராயுடு.. எந்த கட்சி தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Mani Singh S
Published: Saturday, June 17, 2023, 14:48 [IST]
ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரருமாக விளங்கிய அம்பத்தி ராயுடு, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரருமாக விளங்கிய அம்பத்தி ராயுடு நடப்பு ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சூட்டோடு சூடாக அரசியலில் களத்தில் கால் பதிக்க அம்பத்தி ராயுடு முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அம்பத்தி ராயுடு அண்மையில் இருமுறை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். அது மட்டும் இன்றி ஜெகன் மோகன் ரெட்டியை புகழ்ந்தும் பேசியிருந்தார். இதனால், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் ராயுடு விரைவில் இணைய இருப்பதாக ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. அம்பத்தி ராயுடு குண்டூர் அல்லது கிருஷ்ணா ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைவதை உறுதி செய்வதை ராயுடு அளித்த ஒரு பேட்டியும் மறைமுகாக உறுதி செய்யும் வகையில் இருந்தது. அதாவது அம்பத்தி ராயுடு அளித்த பேடியில், ” அரசியலில் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக ஜெகன் மோகன் ரெட்டி இருப்பதாகவும் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஜெகன் மோகன் ரெட்டி எடுத்துச்செல்வதாகவும் கூறியிருந்தார். எனவே, விரைவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என்று தெரிகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவித்தாலும் பிற வெளிநாட்டு 20 ஓவர் லீக் தொடர்களில் அவர் தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Ambathi Rayudu, former player of the Indian cricket team and a key player in the Chennai Super Kings team, has announced his retirement from the IPL series. In this case, there are reports that he is joining the YSR Congress party.
Story first published: Saturday, June 17, 2023, 14:48 [IST]

.

Previous Post

”நாட்டுக்கான துரோக வரலாறு தான் பாஜகவுக்கு இருக்கிறது” – நேரு நினைவு அருங்காட்சியக விவகாரத்தில் கே.எஸ். அழகிரி கருத்து

Next Post

சென்னை | இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிப்பு: 3 இளைஞர்கள் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிப்பு: 3 இளைஞர்கள் கைது

சென்னை | இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிப்பு: 3 இளைஞர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In