Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆதரவற்ற குழந்தைகள் தீபாவளி கொண்டாடுவதற்கு 7 ஆண்டுகளாக புத்தாடை வழங்கி வரும் திமுக எம்எல்ஏ

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ஆதரவற்ற குழந்தைகள் தீபாவளி கொண்டாடுவதற்கு 7 ஆண்டுகளாக புத்தாடை வழங்கி வரும் திமுக எம்எல்ஏ
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் காப்பகங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு, திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்துக் கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார்.

ராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ தங்கபாண்டியன். இவர் தனது மாத ஊதியத்தில் இருந்து கரோனா நிவாரண நிதி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை வழங்கி வருகிறார். அதேபோல் கடந்த 6 ஆண்டுகளாக தனது மாத ஊதியத்தில் இருந்து ஆதவரவற்ற குழந்தைகள் தீபாவளி கொண்டாடுவதற்கு புத்தாடை வழங்கி அவர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ராஜபாளையம் அருகே பொன்னகரம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகர் லைட் ஆஃப் லைஃப் குழந்தைகள் காப்பகம், சேத்தூர் அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஆகிய 3 காப்பகத்தில் உள்ள 231 ஆதரவற்ற குழந்தைகளை பிரபல ஜவுளி கடைக்கு எம்எல்ஏ தங்கபாண்டியன் அழைத்து சென்றார். அங்கு குழந்தைகள் அவர்கள் விரும்பும் உடைகளை எம்எல்ஏ வாங்கி கொடுத்தார். எம்எல்ஏ தங்கபாண்டியன் 3 மாத ஊதியத்தில் தொடர்ந்து 7-வது ஆண்டாக 231 குழந்தைகளுக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பில் புதிய ஆடைகளை வாங்கி கொடுத்தார்.

எம்எல்ஏ தங்கபாண்டியன் கூறுகையில், “தமிழக அரசு ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆதரவற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடுவதற்காக தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்து கொடுத்து வருகிறேன். குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதை போல எனக்கும் மன நிறைவை தருகிறது. தீபாவளி அன்று காப்பகத்துக்கு நேரடியாக சென்று இனிப்பு, பட்டாசு கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாட உள்ளேன்”, என்றார்.

.

Tags: ஆணடகளகஆதரவறறஎமஎலஏகணடடவதறககழநதகளதபவளதமகபததடவரம.வழஙக
Previous Post

”தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Next Post

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    எம்எல்ஏ தங்கபாண்டியன் அவர்களின் செயல் மிகவும் வரவேற்க வேண்டியது ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஏழு ஆண்டுகளாக உதவி வரும் செயல் மிகவும் பாராட்டப்பட வேண்டியது எம்எல்ஏக்கள் அதாவது அரசியல்வாதிகள் என்றாலே மக்கள் மனதில் ஒரு மட்டமான எண்ணம் இருக்கும் இந்த வேலையில் எம்எல்ஏ தங்கபாண்டியன் செயல் மிகவும் சந்தோஷப்பட வேண்டியது அரசியல்வாதிகள் இதை பார்த்து ஆதரவற்றோருக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In